நல்ல Finisher தான்...ஆனால் இதை மட்டும் தோனி செய்யவே மாட்டாரு - முன்னாள் வீரர் வேதனை
டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை குஷிப்படுத்தினார் தோனி.
தோனி - CSK
5 முறை சென்னை அணிக்கு கோப்பையை வென்று கொடுத்த கேப்டனான தோனி தனது கிரிக்கெட் வாழ்வில் கடைசி அத்தியாயங்களை எழுதி வருகின்றார். இம்முறை சென்னை அணிக்கு இளம் வீரர் ருதுராஜை கேப்டனாக்கிவிட்டு அவருக்கு களத்தில் துணையாக நின்றுள்ளார்.
ரசிகர்கள் தோனிக்கு ஒவ்வொரு போட்டியில் சிறப்பான வரவேற்பை கொடுத்து வருகிறார்கள். விளையாடிய 3 போட்டிகளால் 2'இல் தோனி பேட்டிங் செய்யவில்லை. ரசிகர்கள் பெரும் கவலையில் இருந்தார்கள், ஆனால் கடைசியாக டெல்லி அணிக்கு எதிராக களமிறங்கி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
செய்யவே மாட்டாரு
சென்னை அணி தோல்வியை சந்தித்து விட்ட நிலையிலும், தோனி களத்தில் இருந்ததால் அவருக்காக பிஎலக்டிங் அமைத்து பந்து வீசியதை நாம் கண்டோம். வெறும் 16 பந்துகளை எதிர்கொண்ட தல தோனி, 4 ஃபோர், 3 சிக்ஸர்களுடன் 37 ரன்களை விளாசினார்.
42 வயதையடைந்தும் தோனி மைதானத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதை ரசிகர்கள் அணி தோற்று விட்டது என்பது தாண்டி கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் தான் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜாம்பவான் கிளார்க் தோனி குறித்து பேசியுள்ள கருத்துக்கள் வைரலாகி வருகின்றது.
மகத்தான ஃபினிஷர் தோனி இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பாரே தவிர யார் சொன்னாலும் மேல் பேட்டிங் வரிசையில் களமிறங்க மாட்டார் என குறிப்பிட்டு, ஏற்கனவே நிறைய விளையாடி வெற்றி கண்ட தோனி இனியும் 4, 5, 6 ஆகிய இடங்களில் களமிறங்கி சாதிப்பதற்கு ஒன்றுமில்லை என்றே சொல்லலாம் என்று குறிப்பிட்டார்.