#YelloveArmy தயாராகுங்கள் - சென்னையில் நடக்கும் CSK vs KKR டிக்கெட் விற்பனை எப்போது தெரியுமா..?
சென்னை அணி வரும் 8-ஆம் தேதி சென்னை சேப்பாக்க மைதானத்தில் KKR அணியை எதிர்கொள்கிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ்
நடப்பு சாம்பிய ன் சென்னை அணி, இந்த தொடரில் புது கேப்டன் ருதுராஜ் தலைமையில் இது வரை 3 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் 1 தோல்வி, 2 வெற்றி என புள்ளிபட்டியலில் 3-வது இடத்தில் சென்னை அணி நீடிக்கிறது.
டெல்லி அணிக்கு எதிராக 3-வது போட்டியில் சென்னை அணி தோற்றாலும், சென்னையின் "தல" தோனி இறுதி கட்டத்தில் களமிறங்கி 37 ரன்களை வெறும் 16 பந்துகளில் விளாசி ரசிகர்களை குஷிப்படுத்தினார்.
டிக்கெட் விற்பனை
வரும் 5-ஆம் தேதி சென்னை அணி பலமான ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணியை ஹைதராபாத்தில் எதிர்கொள்கிறது. இந்த போட்டியை தொடர்ந்து அடுத்ததாக வரும் 8-ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்திற்கு திரும்பும் சென்னை அணி, மற்றொரு பலமான கொல்கத்தா அணியை சந்திக்கிறது.
கொல்கத்தா அணி புள்ளிபட்டியலில் 2-வது இடத்தில் தற்போதிருப்பது குறிப்பிடத்தக்கது. சென்னை - கொல்கத்தா அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை வரும் 5-ஆம் தேதி துவங்கும் என்று அறிவிக்கப்பட்டது. அனைத்து டிக்கெட்டுகளை ஆன்லைனில் தான் விற்பனை செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.