உலகின் முக்கிய வீரர் தான்..ஆனால் அணிக்கு தேவையே இல்லை - நீக்கிய தோனி! யார் அது?

Swetha
in கிரிக்கெட்Report this article
ஒரு முக்கிய வீரர் அணிகாக ஆடாமல் தனிப்பட்ட ஆட்டத்தில் மட்டுமே ஆர்வம் காட்டியதாக தோனி கூறியுள்ளார்.
முக்கிய வீரர்
முன்னதாக தோனி பேட்டி ஒன்றில் சிஎஸ்கே அணியின் முக்கிய வீரர் சில காரணங்களால் அணியில் இருந்து நீக்கப்பட்டார் என அந்த வீரரின் பெயர் சொல்லாமல் கூறியிருந்தார். மாறாக அவர் கிரிக்கெட் உலகின் முக்கியமான வீரர் என்று மட்டும் சூசகமாக குறிப்பிட்டு இருக்கிறார். தோனியின் இந்த பேட்டி சிஎஸ்கே ரசிகர்கள் இடையே பேசுபொருளாக மாறியது.
மேலும் யார் அந்த வீரர் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. இது குறித்த பேட்டியில், "எங்கள் அணியில் நாங்கள் ஒரு நல்ல வீரரை தேர்வு செய்தோம். ஆனால், அவர் எங்கள் அணியின் சூழ்நிலைக்கு முற்றிலும் மாறாக இருந்தார். நாங்கள் அவரிடம் என்ன எதிர்பார்த்தோம்?
ஒட்டுமொத்த அணியின் இலக்கை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்து வருமாறு கூறினோம். அவர் அதை செய்தால் நாங்கள் மூன்று அடி அவருக்காக இறங்கிச் செல்ல தயாராக இருந்தோம். ஆனால், அது நடக்கவில்லை. இரண்டாம் கட்டமாக, நீங்கள் உங்கள் ஆட்டத்தை ஆடுங்கள். ஆனால், அணியை பாதிக்காத வகையில் செயல்படுங்கள் என்றோம்.
நீக்கிய தோனி
அதுதான் இரண்டாவது மிகச் சிறந்த வாய்ப்பு. மூன்றாவது அவரை அணியை விட்டு அனுப்புவது தான் ஒரே வாய்ப்பு." என்றார். மேலும், "அது வியாபாரமோ, விளையாட்டோ நீங்கள் சிறப்பாக செயல்பட வேண்டும். எங்கள் அணியின் இலக்கு என்பது ஒரு வீரரிடம் இருந்து அனைத்து திறமைகளையும் வெளிக்கொண்டு வர வேண்டும் என்பதுதான்.
அவர் அணிக்காக சிறப்பாக செயல்பட்டால் நான் அவரை அணியின் சொத்தாக மாற்றுவதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ, அதை செய்ய முயற்சிப்பேன். ஆனால் அவர்களும் அதை புரிந்து கொண்டு அதற்கான முயற்சியில் இறங்க வேண்டும். அவர்கள் அதற்கான முதல் அடியை எடுத்து வைக்கவில்லை என்றால்,
இரண்டாவது வாய்ப்பைத் தான் நான் எடுக்க முடியும். ஒரு நபருக்காக ஒட்டுமொத்த அணியும் மாறுவதை நான் விரும்பவில்லை. அது மிகவும் தவறு. எனவே, அவரை அணியவிட்டு அனுப்புவது தான் ஒரே வழி." தொடர்ந்து, "அவர் மிகச்சிறந்த வீரராக இருந்தாலும் அவரை அணியை விட்டு நீக்கித் தான் ஆக வேண்டும்.
அவருடைய இடத்தை வேறு யாராவது வந்து நிரப்புவார்கள். அப்படி மாற்றாக வருபவர்கள் அந்த சிறந்த வீரருக்கு இணையாக செயல்படவில்லை என்றாலும் அணி சிறப்பாக செயல்பட உதவுவார்கள்." என்று வெளிப்படையாக பேசியிருக்கிறார்.