அடுத்த தல இவர் தான்; தோனியே புகழ்ந்து தள்ளிய நபர் யார் தெரியுமா?
தனது இடத்தை ருதுராஜ் கெய்க்வாட் நிரப்புவார் என தோனி நம்புகிறார்.
சென்னை சூப்பர் கிங்க்ஸ்
ஐபிஎல் போட்டிகள் கடந்த 22-ம் தேதி முதல் தொடங்கி சென்னை, ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்று வருகிறது.
இரண்டு போட்டிகளில் விளையாடிய சென்னை அணி, இரண்டிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து, ராஜஸ்தான் அணி இரண்டாவது இடத்திலும், ஹைதராபாத் அணி மூன்றாவது இடத்திலும் உள்ளது.
தோனி நம்நம்பிக்கை
இரண்டு போட்டிகளில் விளையாடிய மும்பை அணி இரண்டிலும் தோல்வியைத் தழுவி 9-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மகேந்திர சிங் தோனி,
எனது இடத்தை ருதுராஜ் கெய்க்வாட் நிரப்புவார் என நம்புகிறேன். நான் மைதானத்தில் பெரிதும் ரியாக்ட் செய்யும் ஆள் கிடையாது, குறிப்பாக யாராவது அவர்களது முதல் அல்லது இரண்டாவது போட்டியில் விளையாடும்போது கண்டு கொள்ளமாட்டேன். ருதுவும் அதேபோல தான் என நான் நினைக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் தலைவரை விமர்சித்த கருணா : போராளிகளின் வளர்ச்சி விருப்பமில்லை என்று குற்றச்சாட்டு IBC Tamil
