வெறும் 2 ஓவர் தான் ஆடுவாரா?? சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கலாய்க்கும் தேசிய அணி!

MS Dhoni Chennai Super Kings IPL 2024
By Karthick Apr 22, 2024 05:34 AM GMT
Report

நடப்பு ஐபிஎல் தொடரில் முன்னாள் கேப்டன் தோனி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றார்.

தோனி

கிட்டத்தட்ட தன்னுடைய கிரிக்கெட் விளையாடுவதில் அத்தியாயத்தில் கடைசி கட்டத்தை எட்டியுள்ள தோனி, இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கேப்டன் பதவியில் இருந்து நீங்கினார்.

dhoni-playing-in-8th-wicket-trolls

விக்கெட் கீப்பராக மட்டுமே தொடரும் அவர், மைதானத்தில் இளம் கேப்டன் ருதுராஜ்ஜிற்கு பெரும் பக்கபலமாக நீடித்து வருகின்றார். ஆனால், பெரும் அசுரத்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றார்.

dhoni-playing-in-8th-wicket-trolls

முதல் இரண்டு ஆட்டங்களில் பேட்டிங் செய்யாத அவர், அடுத்தடுத்த ஆட்டங்களில் களமிறங்கி ரசிகர்களை பெருமளவில் குதூகலப்படுத்தினார்.

5 வருடமாக தோனி'யால் முடியாதது...5 போட்டியிலேயே செய்த ருதுராஜ் - குவியும் பாராட்டுக்கள்

5 வருடமாக தோனி'யால் முடியாதது...5 போட்டியிலேயே செய்த ருதுராஜ் - குவியும் பாராட்டுக்கள்

டெல்லி அணிக்கு எதிராக 16 பந்துகளில் 37 ரன்கள் (4 ஃபோர், 3 சிக்ஸ்) மும்பை அணிக்கு எதிராக 4 பந்துகளில் 20 ரன்கள்(3 சிக்ஸ்), லக்னோ அணிக்கு எதிராக 9 பந்துகளில் 28 (3 ஃபோர், 2 சிக்ஸ்) என விளாசி அதிரவைத்தார்.

கிண்டல் 

கடைசி 2 அல்லது 3 ஓவர்களில் களமிறங்கும் அவர், சென்னை அணிக்கு பெரிதாக உதவுகிறார். ரசிகர்கள் அவரை முன்வரிசையில் களமிறக்கவேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

dhoni-playing-in-8th-wicket-trolls

இந்நிலையில் தான் இது குறித்து ஐஸ்லாந்து அணி கிரிக்கெட் கமெண்ட் செய்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

எம்எஸ் தோனி ஐஸ்லாந்துக்காக விளையாடினால் 8 விக்கெட்டிற்கு முன்பாகவே களமிறக்குவோம். தோனி இளம் வீரர்களை போல விளையாடுகிறார். அவருக்கு சிஎஸ்கேயில் திறமையைக் காட்ட வாய்ப்பு கிடைக்கவில்லைஎன வேடிக்கையாக பதிவிட்டுள்ளது.