தனது கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறை - CSK அணிக்காக தோனி எடுத்த முடிவு
தோனி தனது பேட்டின் எடையை குறைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2025 ஐபிஎல்
கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் 18வது ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி மே 25 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மார்ச் 23ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் தனது முதல் போட்டியில் மும்பையை எதிர்கொள்கிறது.
தோனி பேட்
தற்போது 43 வயதாகும் தோனிக்கு இதுவே கடைசி ஐபிஎல் தொடர் என்ற எதிர்பார்ப்பு நிலவுவதால், சென்னை கோப்பையை வென்று தோனிக்கு அர்ப்பணிக்க வேண்டும் என ரசிகர்கள் விரும்புகின்றனர். தற்போது ஐபிஎல் தொடருக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வரும் தோனி, சில மாற்றங்களை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக 1250 கிராம் முதல் 1300 கிராம் எடையுடைய பேட்டை பயன்படுத்தி வந்த தோனி, தற்போது 10 - 20 கிராம் எடை குறைத்து, 1230 கிராம் எடையுள்ள பேட்டை பயன்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தோனிக்கு வயதான காரணத்தால், முன்பை போல் பேட்டை தூக்கி வேகமாக அடிக்க முடியாததால் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. எடை குறைவான பேட்டை பயன்படுத்தும் போது தோள்பட்டைகளில் வலி ஏற்படாது மற்றும் பந்தை வேகமாக அடிக்க முடியும் என கூறப்படுகிறது. தோனி முதல் முறையாக எடை குறைந்த பேட்டை பயன்படுத்த உள்ளார்.