தொடர்ந்து விளையாட...வயசாகிடுச்சு'னு யாரும் பாவம் பாக்கமாட்டாங்க!! மனம்திறந்த தோனி
தோனி
இந்திய அணியை வழிநடத்தியவர்களில் முக்கியமான இடத்தில் இருக்கிறார் தோனி. 2 உலகக்கோப்பை, டெஸ்ட் போட்டி புள்ளிப்பட்டியலில் அணி முதல் இடம், ஒரு சாம்பியன்ஸ் டிராபி என வரிசையாக பல சாதனைகளை படைத்துள்ளார்.
அதே போல, சென்னை அணிக்கும் 5 முறை கோப்பையும் வென்று கொடுத்துள்ளார் தோனி. அவரின் வயது குறித்து பல கருத்துக்கள் பேசப்படும் நிலையில், 2010-இல் சர்வதேச தொடரில் இருந்து ஓய்வு பெற்றவர், இந்த ஆண்டு ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெறவுள்ளார் என பல கருத்துக்கள் பேசப்படுகிறது.
ஆனால், அது குறித்து தோனி இதுவரை பேசவில்லை. நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணி வெளியேறிய நிலையில், தோனி 220.54 ஸ்ட்ரைக் ரேட்டில் 161 ரன்கள் குவித்திருக்கிறார்.
பாவம் பார்க்க ...
துபாய் சென்றுள்ள அவர் அளித்த பேட்டியில், கடினமான விஷயம் என்றால் அது ஆண்டு முழுவதும் உடற் தகுதியுடன் இருக்கும் இளம் வீரர்களுடன் போட்டிபோட வேண்டும்.
நான் ஆண்டு முழுவதும் கிரிக்கெட் விளையாடவில்லை. 2 மாதங்கள் விளையாடினாலும் வருடம் முழுவதும் முழு உடற் தகுதியுடன் இருப்பது அவசியம்.
போட்டியில் வயதாகி விட்டது என்பதற்காக யாரும் பாவம் பார்க்க மாட்டார்கள். தொடர்ந்து விளையாட வேண்டுமென்றால் உடற் தகுதியுடன் இருப்பது அவசியமாகும். ஆனால், வயது அப்படி ஒத்துழைக்காது.