கைகுலுக்க வராத ஆர்சிபி வீரர்கள் - திரும்பி வந்த தோனி - அவமதிக்கப்பட்டாரா??

MS Dhoni Royal Challengers Bangalore Chennai
By Karthick May 19, 2024 10:44 AM GMT
Report

ஐபிஎல் 2024ல் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் வெளியேறியதை அடுத்து, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர்களுடன் கைகுலுக்காமல் மனமுடைந்த எம்எஸ் தோனி மைதானத்தை விட்டு வெளியேறிய வீடியோ பெரும் வைரலாகி வருகின்றது.

சென்னை தோல்வி

201 ரன்களை எடுத்தால் Playoff வாய்ப்பை தக்கவைத்து கொள்ளலாம் என்ற உத்வேகத்துடன் பேட்டிங் செய்ய துவங்கிய சென்னை அணி அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

dhoni handshake vs rcb viral video controversy

ருதுராஜ் ரன் எடுக்காமலும், மிச்சேல் 4 ரன்னிலும், துபே 7, சண்டனர் 3 ரன் என அடுத்தடுத்த அவுட்டாகினர். தாக்குப்பிடித்து ஆடிய ரச்சின் ரவீந்திரா 61, ரஹானே 33 ரன்களை குவித்தனர்.

சென்னை தோல்விக்கு காரணமே தோனி தான் - கலாய்த்த தினேஷ் கார்த்திக்

சென்னை தோல்விக்கு காரணமே தோனி தான் - கலாய்த்த தினேஷ் கார்த்திக்

இறுதியில் ஜடேஜா மற்றும் தோனி போராடிய நிலையிலும் சென்னை அணி 191/7 மட்டுமே எடுத்தது. தோல்வியடைந்து வெளியேறிய நிலையில், போட்டிக்கு பிறகு வீரர்கள் பரஸ்பரம் கைகுலுக்கிக்கொள்வது வழக்கம். தோனி, டக் அவுட்டில் இருந்து வந்து ஆர்சிபி வீரர்களை வாழ்த்த காத்திருந்தார்.

RCB வீரர்கள் கொண்டாட்டத்தில் இருந்து நிலையில், நிதானமிழந்த தோனி, சிறிது நேரம் காத்திருந்த பிறகு, CSK டிரஸ்ஸிங் அறைக்குள் சென்றுள்ளார். இது தொடர்பாக பல வகையான கருத்துக்கள் பரபரப்பட்டு வருகின்றது.

dhoni handshake vs rcb viral video controversy

விரக்தியில் தோனி இவ்வாறு செய்து விட்டார் என்று ஒரு சாராரும், வெற்றி பெற்றதன் காரணமாக, ஆர்சிபி வீரர்கள் திளைத்து போய்விட்டார்கள் என்று ஒரு தரப்பும், தோனியை அவமதித்து விட்டனர் ஆர்சிபி வீரர்கள் என்று ஒரு தரப்பினரும் மாறி மாறி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.