15 கோடியை ஏமாற்றிய நண்பர்..புகார் அளித்துள்ள தோனி..? என்ன நடந்தது..?
தன்னை ஏமாற்றிய நண்பர் மீது கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி வழக்கை தொடுத்துள்ளார்.
வழக்கின் பின்னணி..?
ஐபிஎல் தொடரில் கிரிக்கெட் அகாடமி ஒப்பந்தம் தொடர்பாக ஆர்கா ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட்டின் அதிகாரிகள் இருவர் மீது கிரிக்கெட் வீரர் தோனி ராஞ்சியில் கிரிமினல் வழக்கு தொடுத்துள்ளார்.
ஆர்கா ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் மிஹிர் திவாகர் மற்றும் சௌமியா விஸ்வாஷ் ஆகியோர் மீது தோனி அளித்துள்ள புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு உலகளவில் கிரிக்கெட் அகாடமியை நடத்துவதற்காக தோனியுடன் மிஹிர் திவாகர் ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டார்.
ரூ.15 கோடி இழப்பு
இதில் குறிப்பிடப்பட்ட விதிமுறை ஆர்கா ஸ்போர்ட்ஸ் ஒரு உரிமைக் கட்டணத்தைச் செலுத்தவும், ஒப்பந்தத்தின் விதிமுறைகளின்படி லாபத்தைப் தோனியுடன் பகிர்ந்து கொள்ளவும் பதியப்பட்டுள்ளது. ஆனால், அந்த விதிமுறைகளை கடைபிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
பலமுறை இது குறித்து கேட்ட போதிலும் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அதிகார கடிதத்தை திரும்பப் பெற தோனி முயன்றார் என்றும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக, ரூ.15 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கருதியே வழக்கு பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.