நீ கவலைப்படாதே..ஆபரேஷனை நான் பாத்துக்குறேன் - ரசிகரை கிரவுண்டில் நெகிழ வைத்த தோனி
தோனி
இந்திய கிரிக்கெட் மட்டுமின்றி உலக கிரிக்கெட் அரங்கில் அறிமுகம் தேவையில்லாத ஒருவர் தோனி. ICC'யில் இருக்கும் அனைத்து கோப்பைகளையும் வென்றவர், இந்திய அணியை மட்டுமின்றி ஐபிஎல் தொடரிலும் சிறப்பான கேப்டனாக நீடிக்கிறார்.
தோனி என்ற பெயர் கிரிக்கெட் தெரியாதவர்களும் தெரியும். அந்த அளவிற்கு அவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டம் பின்தொடர்ந்து வருகின்றது. கேப்டன் கூல் என புகழப்படும் தோனி குறித்த செய்தி ஒன்று தற்போது வெளியாகி ரசிகர்களை பெரியளவில் நெகிழ வைத்துள்ளது.
அகமதாபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் தோனி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, ரசிகர் ஒருவர் பாதுக்காப்பு வளையத்தைக் கடந்து தோனியை சந்தித்தார். தற்போது அந்த ரசிகர் தோனியைச் சந்தித்த பின்னர் அங்கு என்ன நடந்தது என்பதை பகிர்ந்துள்ளார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ஆபரேஷனை
அவர் பேசியது வருமாறு, நான் மைதானத்திற்குள் ஓடிய போது, தோனி என்னை தவிர்த்துவிடுவார் என நினைத்தேன். ஆனால், அவர் என்னை பார்த்ததும், அமைதியாக இரு என்றார். எனது உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் உடனே அவரின் காலில் விழுந்தேன். அழ ஆரம்பித்தேன். என்னை தூக்கி கட்டிப்பிடித்தார் தோனி.
என் தோள்மீது கை போட்டு நடந்தபடி, நான் பேசுவதை கேட்டார். அப்போது அவரிடம் எனக்கு அறுவை சிகிச்சை நடக்கவுள்ளது என்றும் அதற்கு முன்னர் உங்களைப் பார்க்க வரவேண்டும் என நினைத்தாக கூறினார்.
Conversation between @msdhoni and fan ??
— ` (@WorshipDhoni) May 29, 2024
Fan told him he has some breathing issues and there is surgery of it. He wanted to meet him before surgery. Mahi replied "Teri surgery ka mai dekh lunga. Tujhe kuch nahi hoga, tu ghabara mat. Mai tujhe kuch nahi hone dunga" pic.twitter.com/wKz9aZOVGQ
அதற்கு அவர், நீ பயப்படாதே, அறுவை சிகிச்சையை நான் பார்த்துக் கொள்கின்றேன், பாதுகாவலர்களிடம் பேசிக்கொள்கிறேன், அவர்கள் எதுவும் செய்யமாட்டார்கள் என்றார். திடீரென பாதுகாவலர்கள் எனது கழுத்தைப் பிடித்த நிலையில், அவர்களைத் தடுத்த தோனி, என்னை மரியாதையுடன் அனுப்பி வைக்கும்படி கூறினார்.