கொல்கத்தாவுடனான தோல்விக்கு இதுதான் காரணம் - தோனி வேதனை!
கொல்கத்தாவுடான போட்டியில் பனிப்பொழிவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக தோனி தெரிவித்துள்ளார்.
CSK vs KKR
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய தோனி, "180 ரன்கள் எடுத்தால் தான் வெற்றி பெற முடியும் என முதல் பந்திலேயே தெரிந்துவிட்டது. அப்போதுதான் பேட்டிங் செய்திருக்கக் கூடாது என உணர்ந்தேன்.
தோனி பேட்டி
போட்டியில் பனிப்பொழிவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. தோல்விக்கு யாரையும் குறை கூற முடியாது. அனைவரும் முடிந்தவரை முயற்சி செய்தனர். கள சூழல்தான் இந்த ஆட்டத்தில் எங்களுடைய வெற்றியை பாதிக்க வைத்து விட்டது.
பேட்டிங்கில் கூடுதலாக 25 ரன்கள் எடுத்திருக்க இருக்க வேண்டும். ஆனால், நாங்கள் பேட்டிங் செய்யும்போது சுழற் பந்து வீச்சுக்கு சாதகமாக சூழல் இருந்தது எனத் தெரிவித்துள்ளார்.
புள்ளிப் பட்டியலில் சென்னை தொடர்ந்து இரண்டாவது இடத்திலேயே நீடிக்கிறது.