தோனி தலைமையில் விதவிதமாக பயிற்சியில் ஈடுபட்ட சிஎஸ்கே வீரர்கள்
ஐபிஎல் 2021 வருகிற ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கி மே 30 வரையில் நடைபெறுகிறது. மேலும் இந்த தொடருக்காக அனைத்து அணி வீரர்களும் பயிற்சியை தொடங்கியுள்ளனர். அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் 11-ம் தேதிலிருந்து பயிற்சியை தொடங்கினர்.
கடந்த 4 ம் தேதி சென்னை வந்த தோனி ஆறு நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு பிறகு நேற்றுமுதல் வலைபயிற்சியை தொடங்கினார். தோனி தலைமையில் அம்பதி ராயுடு, கெய்க்வாட், தமிழக வீரர்களான ஜெகதீசன், சாய் கிஷோர் ஆகியோர் வலைபயிற்சியில் ஈடுபட்டனர்.
கடந்தாண்டு மோசமாக அமைந்ததை மாற்றியமைக்கும் முனைப்பில் சென்னை வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Back with the bat and ball. Jaddugar coming soon! #Yellove #WhistlePodu ?? @imjadejapic.twitter.com/TsVVuKs7A9
— Chennai Super Kings (@ChennaiIPL) March 11, 2021
இத்தாலியிலிருந்து அழைத்துவரப்படவுள்ள கஞ்சிபானி இம்ரான்! கைது குறித்த அரசாங்கத்தின் மறைமுக அறிக்கை IBC Tamil
ஈரானுக்கு எதிராக அணு ஆயுதத்தை பயன்படுத்தப்போகும் ட்ரம்ப்: நகர்வுகளை விவரிக்கும் US முன்னாள் எம்.பி IBC Tamil