இறக்கும் தருவாயில் - அப்பாக்கு செய்து கொடுத்த சத்தியம் - இன்று வரை கடைபிடிக்கும் டிடி
சின்னத்திரையில் மிகவும் பிரபலமாக இருந்து வருகின்றார் திவ்யதர்ஷினி.
திவ்யதர்ஷினி
தமிழ் சின்னத்திரையில் மிக பிரபலமான தொகுப்பாளர் என்றால் திவ்யதர்ஷினியை தான் பலரும் குறிப்பிடுவார்கள். தற்போது பிரபலமாக இருக்கும் அனைவருக்குமே முன்னோடியாக இருப்பவர் திவ்யதர்ஷினி.
விஜய் டிவி தொலைக்காட்சியில் இவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகள் பெரும் ஹிட்டித்த நிகழ்ச்சிகளாக அமைந்தது. அதனை தொடர்ந்து படங்களிலும் நடிக்க துவங்கினார் திவ்யதர்ஷினி.
மலையாள நடிகர் டோவினோ தாமஸ் ஜோடியாக ஆல்பம் பாடல் ஒன்றிலும் அவர் நடித்துள்ளார். தனிப்பட்ட வாழ்க்கையில் பல இன்னல்களை சந்தித்த அவருக்கு எப்போதும் உறுதுணையாக இருந்தது அவரின் தந்தை தானாம்.
சத்தியம்
தனக்கு உறுதுணையாக இருந்த அப்பாவிடம் செய்து கொடுத்த சத்தியத்தை குறித்து தற்போது வெளிப்படுத்தியுள்ளார் திவ்யதர்ஷினி.
உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில், தனது தந்தையிடம் "நீங்கள் கவலைப்படாதீங்க அப்பா நம்முடைய குடும்பத்தை நான் பார்த்துக்கொள்கிறேன்" என சத்தியம் செய்து கொடுத்தாராம் திவ்யதர்ஷினி.
இது நடந்த சில மணி நேரங்களிலேயே அவர் இறந்துள்ளார். தொகுப்பாளினி டிடி தனது தந்தை குறித்து புகைப்படம் மற்றும் கடிதம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று வரை தனது குடுமபத்தை கவனித்து கொண்டு தான் வருகிறார் திவ்யதர்ஷினி.