2-ஆம் காதல் தவறா? திடீரென வந்த கேள்வி..டிடி சொன்ன பதிலை கவனித்தீர்களா!

Dhivyadharshini Marriage
By Karthick Aug 08, 2024 03:14 PM GMT
Report

பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினி ரசிகர் ஒருவரின் கேள்விக்கு அளித்துள்ள பதில் கவனத்தை பெற்றுள்ளது.

திவ்யதர்ஷினி

தமிழ் சின்னத்திரையில் மிக பிரபலமான தொகுப்பாளர் என்றால் திவ்யதர்ஷினியை தான் பலரும் குறிப்பிடுவார்கள். தற்போது பிரபலமாக இருக்கும் அனைவருக்குமே முன்னோடியாக இருப்பவர் திவ்யதர்ஷினி.

Anchor Dhivyadharshini

விஜய் டிவி தொலைக்காட்சியில் இவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகள் பெரும் ஹிட்டித்த நிகழ்ச்சிகளாக அமைந்தது. அதனை தொடர்ந்து படங்களிலும் நடிக்க துவங்கினார் திவ்யதர்ஷினி. 

Anchor Dhivyadharshini

நடிகர் டோவினோ தாமஸ் ஜோடியாக ஆல்பம் பாடல் ஒன்றிலும் அவர் நடித்துள்ளார். டிடி'க்கு திருமணமான சில மாதங்களிலேயே அவர்களுக்கு விவாகரத்தும் நடந்துவிட்டது. அவ்வப்போது மீண்டும் திவ்யதர்ஷினிக்கு திருமணம் என தொடர்ந்து செய்திகள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன.

இறக்கும் தருவாயில் - அப்பாக்கு செய்து கொடுத்த சத்தியம் - இன்று வரை கடைபிடிக்கும் டிடி

இறக்கும் தருவாயில் - அப்பாக்கு செய்து கொடுத்த சத்தியம் - இன்று வரை கடைபிடிக்கும் டிடி

இரண்டாவது காதல்

ஆனால், இவை முற்றிலும் புரளிகளாவே முடிந்துள்ளது. இந்நிலையில் தான், சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் திவ்யதர்ஷினியிடம் ரசிகர் ஒருவர் இரண்டாவது காதல் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டார்.

Anchor Dhivyadharshini

இதற்கு பதிலளித்த டிடி, அதென்ன செகண்ட்ல லவ்? காதல் என்பது இரண்டு முறை தான் வருமா? அதெல்லாம் சினிமாவில் சொல்வது. ஒரே நேரத்தில் நான்கு அல்லது ஐந்து காதல் வந்தால் தான் தவறு. வாழ்க்கையில் இரண்டு மூன்று லவ் இருந்தால் அது தவறு இல்லை என்று குறிப்பிட்டுருக்கிறார்.