தருமபுரி மக்களவை தேர்தல் முன்னிலை நிலவரம் - சவுமியாவிற்கு கடும் போட்டி?
தருமபுரி மக்களவை தொகுதியில் சவுமியா அன்புமணி முன்னிலை வகிக்கின்றார்.
சவுமியா அன்புமணி
அதிமுக கூட்டணியை தவிர்த்து பாஜகவுடன் கூட்டணி அமைத்து பெரும் அதிர்வலைகளை தமிழக அரசியலில் ஏற்படுத்தியது பாமக. கூட்டணியில் 10 இடங்களையும் பெற்று அக்கட்சி தேர்தலை சந்தித்துள்ளது.
இவர்களில் பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தியவர் அன்புமணி ராமதாஸின் மனைவி சவுமியா அன்புமணி தான். தருமபுரி தொகுதியில் களமிறங்கிய அவருக்காக அவரது மகள்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
Breaking News : திருச்சியில் கடும் போட்டி கொடுக்கும் நா.த.க - சீமான் அதிரடி பயனளித்ததா?? நிலவரம் என்ன!
தற்போது வெளியாகி வரும் தேர்தல் முடிவுகளில் பாமக ஒரு தொகுதியில் மட்டுமே முன்னிலை எடுத்துள்ளது. அது தருமபுரி தான். 87922 வாக்குகளை பெற்று சவுமியா அன்புமணி முன்னிலை வகிக்கிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுகவின் மணி 71102 வாக்குகளை பெற்று பின்தங்கியுள்ளார்.
இதுவரை தமிழகத்தில் பாஜக கூட்டணி ஒரு இடத்தில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. திமுக 37 இடங்களிலும், தேமுதிக 1 இடத்திலும் முன்னிலையில் உள்ளன