தர்மபுரி மாவட்ட ஆட்சியர் யார் தெரியுமா - முழு விவரம்!
தர்மபுரி மாவட்டம் முந்தைய சேலம் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது. 1965ல் பிரிக்கப்பட்டு மாவட்டமாக உருவாக்கப்பட்டது.
தர்மபுரி
தர்மபுரி 1964 ஏப்ரல் 1 ஆம் தேதி மூன்றாம் நிலை நகராட்சியாகவும், 1971ல் இரண்டாம் நிலை நகராட்சியாகவும், 1987ல் முதல் நிலை நகராட்சியாகவும், 2008ல் தேர்வு நிலை நகராட்சியாகவும், 2019ல் சிறப்பு தர நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
தர்மபுரி மற்றும் அரூர் என இரண்டு வருவாய் கோட்டங்கள், 7 வருவாய் வட்டங்கள், 23 உள்வட்டங்கள், 470 வருவாய்க் கிராமங்கள் உள்ளது.
மேலும் இரண்டு நகராட்சிகளையும், 10 பேரூராட்சிகளையும், 10 ஊராட்சி ஒன்றியங்களையும், 251 கிராம ஊராட்சிகளையும் கொண்டது.
இங்கு பட்டுப்பூச்சி வளர்ப்பு, சிறந்த தொழிலில் ஒன்றாக விளங்கி வருகிறது. கல்வியில் முன்னேறும் மாவட்டமாகவும் இடம்பிடித்து வருகிறது.
ஆட்சியர்கள் விவரம்
தற்போது இந்த மாவட்ட 46வது ஆட்சியராக ரெ.சதீஷ் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக இருந்த ஆட்சியர் கி.சாந்தி பட்டு வளர்ச்சி துறைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். சதீஷ் ஈரோடு மாவட்ட திட்ட அலுவலராகவும், கூடுதல் ஆட்சியராகவும் இருந்தவர்.
இதற்கிடையில் தொடர்ச்சியாக பெண் ஆட்சியர்கள்தான் தர்மபுரியை நிர்வகித்துள்ளனர். திவ்யதர்ஷினி(20121), S.P.கார்த்திகா(2020), சு. மலர்விழி (2018).
இதில் மலர்விழி கலெக்டராக இருந்தபோது, வரி வசூல் ரசீது புத்தகங்களை அதிக விலைக்கு வாங்கி ரூ.1.31 கோடிக்கு முறைகேடு செய்ததாக இவர் மீது புகார் எழுந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்தியதில் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பின் இவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை மேற்கொண்டனர். தற்போது இவர் சென்னை அறிவியல் நகர துணை தலைவராக உள்ளார்.
இது மாவட்டமாக பிரிக்கப்பட்ட போது, முதலில் ஜி.திருமால் என்பவர் ஆட்சியராக பணியமர்த்தப்பட்டார். இதுவரை 46 பேர் இங்கு ஆட்சியராக இருந்துள்ளனர்
.