மகளிர் ஆளுமையின் கீழ் திண்டுக்கல் - மாவட்ட ஆட்சியர் யார் தெரியுமா?
மாநிலத்தின் 11–வது மாநகராட்சியாக திண்டுக்கல் 2014 ஏப்ரல் மாதம் 10-ஆம் தேதி தரம் உயர்த்தப்பட்டது. 1985-ஆம் ஆண்டில் மதுரை மாவட்டத்திலிருந்து, திண்டுக்கல் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
திண்டுக்கல்
பின் இந்த மாவட்டத்தில் பழனி, ஒட்டன்சத்திரம்,வேடசந்தூர் ஆகிய வட்டங்கள் கொங்கு நாட்டையும், திண்டுக்கல், கொடைக்கானல், ஆத்தூர், நிலக்கோட்டை, நத்தம் வட்டங்கள் பாண்டிய நாட்டையும் சேர்ந்தன.
இம்மாவட்டம் திண்டுக்கல், பழனி, கொடைக்கானல் என 3 வருவாய் கோட்டங்களாகவும், 10 வருவாய் வட்டங்களாகவும், மற்றும் 361 வருவாய் கிராமங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் என 3 நகராட்சிகளையும், 23 பேரூராட்சிகளையும் கொண்டுள்ளது. தமிழ்நாட்டிலேயே கோயம்பேடுக்கு, அடுத்ததாக கருதப்படும் மிக பெரிய காய்கறி சந்தை இங்கு அமைந்துள்ளது.
இங்கிருந்து கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு காய்கறிகள் அனுப்பப்படுகின்றன. இந்த மாவட்டம் மாவட்ட ஆட்சியர், பல்வேறு துறைகளில் முதன்மை அதிகாரிகள் என மகளிர் ஆளுமையின் கீழ் செயல்பட்டு வருகிறது.
ஆட்சியர்கள் விவரம்
மாவட்ட ஆட்சியராகப் பணிபுரிந்த ச.விசாகன் பணியிட மாறுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து எம்.என்.பூங்கொடி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக 2023ல் இருந்து தற்போது வரை பணியாற்றி வருகிறார்.
இவர் முன்னதாக சேலத்தில் சோகோசர்வ் மேலாண்மை இயக்குநராகப் பணிபுரிந்தார். இதற்கு முன் வாசுகி, அமுதா, விஜயலட்சுமி என மூன்று பெண் ஆட்சியர்கள் பணிபுரிந்துள்ளனர். இவர் நான்காவது பெண் ஆட்சியராகப் பணிபுரிந்து வருகிறார்.
மாவட்ட கலால் துறை உதவி ஆணையர் ஜெயச்சித்திரகலா, மாவட்ட பிற்பட்டோர் நலத் துறை அலுவலராக விஜயா, வேளாண்மைத் துறையில் முதன்மைப் பொறுப்பான மாவட்ட வேளாண்மைத் துறை இணை இயக்குநராக அனுசியா என பெண்களே மாவட்ட அளவில் அதிகாரிகளாக உள்ளனர்.
இவ்வாறு மாவட்ட தலைமை, மாவட்ட வருவாய் நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை, மாநகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி கள், வேளாண்மைத் துறை, சமூகநலத் துறை, குழந் தைகள் வளர்ச்சித் திட்டம் என முக்கிய மாவட்டப் பொறுப்புகளில் பெண் அதிகாரிகளே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முதன்முதலாக 1985ல் எம். மாதவன் நம்பியார் என்பவர் ஆட்சியராக பொறுப்பேற்றார். அதன்பின் மிருத்யுஞ்சன் சாரங்கி, சக்திகந்த தாஸ், பிரித்விராஜ் லங்தாசா, ரமேஷ்ராம் மிஸ்ரா, தி. பிச்சாண்டி என அடுத்தடுத்து பல ஆட்சியர்கள் மாறினர். இதன்படி, மொத்தம் 28 மாவட்ட ஆட்சியர்கள் இங்கு பணியாற்றியுள்ளனர்.