‘தி கிரே மேன்’ ஹாலிவுட் படத்தில் நடிக்க தனுஷ் வாங்கிய சம்பளம் எவ்வளவுன்னு தெரியுமா? வாயடைத்த ரசிகர்கள்

Dhanush
By Nandhini Jul 16, 2022 06:09 AM GMT
Report

திருமணம் - விவாகரத்து

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகளான ஐஸ்வர்யாவை கடந்த 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் இடையில் அடிக்கடி ஏற்பட்டு வந்த மனகசப்புகளால் கடந்த ஜனவரி மாதம் இருவரும் பிரிவதாக அறிவித்தனர் அவர்களின் அறிவிப்பு இருவரது குடும்பத்தினரையும் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியது. விவாகரத்துக்கு பின் தனுஷ் தான் நடித்து வரும் படங்களிலும், ஐஸ்வர்யா தன்னுடைய இயக்குனர் வேலையிலும் பிசியாக இருந்து வருகிறார்கள்.

மகன்களுடன் கெத்தாக நின்ற தனுஷ்

நடிகர் தனுஷ் நடித்த ஹாலிவுட் திரைப்படமான தி கிரே மேன் படத்தின் சிறப்பு காட்சி அமெரிக்காவில் திரையிடப்பட்டது. ஹாலிவுட்டில் முன்னணி இயக்குநர்களாகத் திகழ்ந்து வரும் இயக்குநர்கள் இணை ஆண்டனி மற்றும் ஜோ ருஸ்ஸோ. இவர்களது இயக்கத்தில் நடிகர் தனுஷ் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படம் வரும் 22ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது. இப்படத்தின் விழாவிற்கு மகன்களுடன் நடிகர் தனுஷ் சென்றார். இதனையடுத்து, தனது இன்ஸ்டா பக்கத்தில் நடிகர் தனுஷ், ''யாத்ராவும், லிங்காவும் முழுமையாக ஷோவை கைப்பற்றிவிட்டார்கள்'' என்று பதிவிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Dhanush

தனுஷ் வாங்கிய சம்பளம்

ரூஸோ சகோதரர்கள் இயக்கியுள்ள ‘தி கிரே மேன்’ படத்தில் நடித்ததற்காக நடிகர் தனுஷ் வாங்கிய சம்பளம் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. இப்படத்தில் நடிக்க தனுஷிற்கு 5 லட்சம் அமெரிக்க டாலர்களை சம்பளமாக வாங்கியுள்ளாராம். இதன் இந்திய மதிப்பு கிட்டத்தட்ட ரூ.4 கோடியாம்.

கோலிவுட் படங்களில் நடிக்க 15 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் தனுஷ், ஹாலிவுட் படத்திற்காக இவ்வளவு குறைவான தொகையை சம்பளமாக பெற்றுள்ளது அவரது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதுமட்டுமின்றி இப்படத்தில் தனுஷுடன் நடித்த கிரிஷ் எவான்ஸுக்கு 15 மில்லியன் அமெரிக்க டாலரும், ரியான் காஸ்லிங்கிற்கு 10 மில்லியன் அமெரிக்க டாலரும் சம்பளமாக கொடுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.