அமெரிக்காவில் ‘தி கிரே மேன்’ பட விழாவில் இரு மகன்களுடன் கெத்தாக நின்ற தனுஷ் - வைரலாகும் புகைப்படம்

Dhanush Aishwarya Rajinikanth Viral Video Viral Photos
By Nandhini Jul 14, 2022 12:45 PM GMT
Report

திருமணம் - விவாகரத்து

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகளான ஐஸ்வர்யாவை கடந்த 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் இடையில் அடிக்கடி ஏற்பட்டு வந்த மனகசப்புகளால் கடந்த ஜனவரி மாதம் இருவரும் பிரிவதாக அறிவித்தனர் அவர்களின் அறிவிப்பு இருவரது குடும்பத்தினரையும் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியது. விவாகரத்துக்கு பின் தனுஷ் தான் நடித்து வரும் படங்களிலும், ஐஸ்வர்யா தன்னுடைய இயக்குனர் வேலையிலும் பிசியாக இருந்து வருகிறார்கள்.

ஒரே வீட்டில் மீண்டும் இருவர்

தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்துக்கு முன் ஆரியபுரத்தில் உள்ள ஃபிளாட் ஒன்றில் வசித்து வந்துள்ளார்கள். விவாகரத்து அறிவித்த பின்னர், தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும், இதற்குமுன் அவர்கள் வாழ்ந்து வந்த வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வதாக கூறப்படுகிறது. அந்த வீட்டின் வாசலில் இருக்கும் இருவரின் பெயர் கூட இன்னும் நீக்காமல் இருப்பதாகவும் பிரபல மூத்த பத்திரிகையாளர் கூறியது சலசலப்பை ஏற்படுத்தியது.

dhanush

மகன்களுடன் கெத்தாக நின்ற தனுஷ்

நடிகர் தனுஷ் நடித்த ஹாலிவுட் திரைப்படமான தி கிரே மேன் படத்தின் சிறப்பு காட்சி அமெரிக்காவில் திரையிடப்பட்டது. ஹாலிவுட்டில் முன்னணி இயக்குநர்களாகத் திகழ்ந்து வரும் இயக்குநர்கள் இணை ஆண்டனி மற்றும் ஜோ ருஸ்ஸோ.

இவர்களது இயக்கத்தில் நடிகர் தனுஷ் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் 22ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது.

இப்படத்தின் விழாவிற்கு மகன்களுடன் நடிகர் தனுஷ் சென்றார். இதனையடுத்து, தனது இன்ஸ்டா பக்கத்தில் நடிகர் தனுஷ், ''யாத்ராவும், லிங்காவும் முழுமையாக ஷோவை கைப்பற்றிவிட்டார்கள்'' என்று பதிவிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் தனுஷ் இப்படி மகன்களுடன் ஒன்றாக பார்க்க ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.