லிங்கா அம்மா மாதிரி..படு உஷார் - மகன்கள் குறித்து சுவாரஸ்யம் பகிர்ந்த தனுஷ்!

Dhanush Only Kollywood Aishwarya Rajinikanth
By Sumathi Aug 04, 2022 07:44 AM GMT
Report

தன் மகன்கள் யாத்ரா, லிங்கா குறித்து தனுஷ் சில சுவாரஸ்ய தகவல்களை மேடையில் பகிர்ந்தார்.

தனுஷ்

கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ், அவ்வப்போது ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். கடந்த 2018-ம் ஆண்டு ரிலீசான ‘தி இன்கிரிடிபில் ஜர்னி ஆஃப் ஃபகீர்’ படம் மூலம் ஹாலிவுட்டில் எண்ட்ரி கொடுத்தார்.

லிங்கா அம்மா மாதிரி..படு உஷார் - மகன்கள் குறித்து சுவாரஸ்யம் பகிர்ந்த தனுஷ்! | Dhanush Talks About His Sons

தற்போது அங்கு தனது இரண்டாவது படமான தி கிரே மேன் நெட்ஃப்ளிக்ஸில் வெளியானது. இந்நிலையில், படத்துக்கான ப்ரோமோஷனில் பேசியிருந்த தனுஷ், தன் மகன்கள் யாத்ரா, லிங்கா பற்றி சில சுவாரஸ்ய தகவல்களைப் பகிர்ந்திருந்தார்.

தி கிரே மேன்

அப்போது, அதில் யாத்ரா என்னை மாதிரி.அமைதியானவர். நாம ஏதும் சொன்னா அதைப் பற்றி யோசிப்பார். சாப்பாட்டில் மட்டும் அவர் நான் வெஜிடேரியன். நான் சைவம். மற்றபடி, லிங்கா அவங்க அம்மா மாதிரி, படு உஷார். ஏமாற்றவே முடியாது.

லிங்கா அம்மா மாதிரி..படு உஷார் - மகன்கள் குறித்து சுவாரஸ்யம் பகிர்ந்த தனுஷ்! | Dhanush Talks About His Sons

கதை சொல்லித் தூங்க வைச்சிடலாம்னு நினைச்சா நீங்கதான் ஏமாந்து போவீங்க. அவங்க அம்மா எப்பவுமோ எதுலையுமே ஷார்ப். படிச்சவங்க இல்லையா.. அப்படித்தான் இருப்பாங்க என்கிறார்.

ஏமாற்றமுடியாது

அதனைத் தொடர்ந்து ஆங்கர், அப்போ ஐஸ்வர்யாவை ஏமாற்றமுடியாதுனு சொல்லறிங்க அப்படித்தானே? எனவும், அட நல்லவிதமாதாங்க சொல்லறேன் என நகைச்சுவையுடன் பதிலளித்தார் தனுஷ்.

தனுஷும், ஐஸ்வர்யாவும் அண்மையில் தாங்கள் பிரிந்ததாக அறிவித்தது அனைவரும் அறிந்ததே. மேலும் இருவரும் மீண்டும் இணைந்து வாழப்போவதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.