புகைப்பிடிக்கும் காட்சி - தனுஷ் ஆஜராக உயர்நீதிமன்றம் விலக்கு!

Dhanush Aishwarya Rajesh Only Kollywood Chennai
By Sumathi Aug 01, 2022 07:14 AM GMT
Report

 படத்தில் புகைப்பிடிக்கும் காட்சிகள் இடம்பெற்றது தொடர்பான வழக்கின் விசாரணைக்கு தனுஷ் ஆஜராவதில் விலக்கு அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேலையில்லா பட்டதாரி

நடிகர் தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில், சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்கள் விளம்பரப்படுத்தல் தடை மற்றும் முறைப்படுத்தல் சட்ட விதிகளை மீறி காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

புகைப்பிடிக்கும் காட்சி - தனுஷ் ஆஜராக உயர்நீதிமன்றம் விலக்கு! | Dhanush Smoking Scene High Court Order Dispensing

இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் வரும் போது, திரையில் இடம்பெற வேண்டிய எச்சரிக்கை வாசகம் உரிய முறையில் இடம்பெறவில்லை. எனவே தயாரிப்பு நிறுவனம் மற்றும் நடிகர் தனுஷ் ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி

நடிகர் தனுஷ்

தமிழ்நாடு புகையிலை கட்டுப்பாடுக்கான மக்கள் அமைப்பின் சார்பில் 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் தமிழக அரசிடம் புகார் அளிக்கப்பட்டது. இதில் விசாரணை மேற்கொண்ட பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் நடிகர் தனுசுக்கு எதிராக புகார் அளித்திருந்தார்.

புகைப்பிடிக்கும் காட்சி - தனுஷ் ஆஜராக உயர்நீதிமன்றம் விலக்கு! | Dhanush Smoking Scene High Court Order Dispensing

இந்நிலையில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும், விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரியும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அதன் அடிப்படையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு விலக்கு அளித்த நிலையில் நடிகர் தனுஷ்க்கும் நேரில் ஆஜர் ஆவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் வழக்கு விசாரணை ஆகஸ்ட் 10ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.