கணவர் கண்முன்னே நடிகையை தொந்தரவு செய்த தனுஷ் - விவாகரத்தில் முடிந்த விவகாரம்!
நடிகர் தனுஷ் குறித்து வெளியான தகவல் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் தனுஷ்
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் காதலித்து வந்த நிலையில் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்டனர். அதன் பின் 18 ஆண்டுகள் கழித்து பிரிந்துவிட்டார்கள். அதனைத் தொடர்ந்து, ஐஸ்வர்யா மகன்கள் யாத்ரா, லிங்கா ஆகியோருடன் தந்தையின் வீட்டில் வசித்து வருகிறார்.

ஆனால் இருவரும் பிரிந்து வாழ்கின்ற போதிலும் விவாகரத்து பெறவில்லை. இந்நிலையில், "தனுஷ் தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு நடிகையை மாற்றிக்கொண்டே இருப்பார். அவர்களிடம் நன்றாக வேலையும் வாங்கிக்கொள்வார்.
விவாகரத்து
குறிப்பாக பிரபல நடிகை ஒருவரின் விவாகரத்திற்கு காரணமே அவர்தான். அந்த நடிகையின் கணவர் அருகில் இருக்கும்போதே இரவு 12 மணிக்கு தனுஷ் ஃபோன் செய்து பேசுவார்.

இதுதான் அந்த நடிகைக்கும், கணவருக்கும் சண்டை ஏற்பட காரணமாக இருந்தது. இந்த சண்டை நாளுக்கு நாள் அதிகரித்தது. ஒருகட்டத்தில் இது ஒத்துவராது என்று முடிவெடுத்த இரண்டு பேரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார்கள் என பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.