ரஜினியின் சொத்துக்காக விவாகரத்து செய்யாமல் இருக்கும் தனுஷ்? பரவும் தகவல்!
ரஜினியின் சொத்துக்காக தனுஷ் மனைவியை விவாகரத்து செய்யாமல் இருப்பதாக தகவல் பரவி வருகிறது.
தனுஷ்-ரஜினிகாந்த்
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் காதலித்து வந்த நிலையில் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்டனர். அதன் பின் 18 ஆண்டுகள் கழித்து பிரிந்துவிட்டார்கள்.
அதனைத் தொடர்ந்து, ஐஸ்வர்யா மகன்கள் யாத்ரா, லிங்கா ஆகியோருடன் தந்தையின் வீட்டில் வசித்து வருகிறார். ஆனால் இருவரும் பிரிந்து வாழ்கின்ற போதிலும் விவாகரத்து பெறவில்லை.
விவாகரத்து
இந்நிலையில், ஐஸ்வர்யா எவ்வளவோ வற்புறுத்தி விவாகரத்து வேண்டும் என கூறியும் தனுஷ் கொடுக்காமல் இழுத்தடித்து வருகிறார். இதற்கு முழு காரணம் தனுஷ் எங்கே சொத்து எல்லாமே பரிபோய்விடுமே என்ற நோக்கில் அதற்கு வேண்டாம் என்று இருக்கிறார் என பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு கூறியுள்ளார்.
தற்போது, தனுஷ் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே தனது 50வது படத்தை தானே இயக்குகிறார்.