தனுஷ்-க்கு 2வது திருமணம்; பொண்ணு அவங்கதான் - கஸ்தூரி ராஜா முடிவு!

Dhanush Tamil Cinema
By Sumathi May 23, 2024 02:30 PM GMT
Report

தனுஷ் 2வது திருமணம் குறித்த தகவலை பிரபலம் ஒருவர் பகிர்ந்துள்ளார்.

நடிகர் தனுஷ்

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் காதலித்து வந்த நிலையில் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்டனர். அதன் பின் 18 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த நிலையில் பிரிந்துவிட்டார்கள்.

dhanush

அதனைத் தொடர்ந்து, ஐஸ்வர்யா மகன்கள் யாத்ரா, லிங்கா ஆகியோருடன் தந்தையின் வீட்டில் வசித்து வருகிறார். ஆனால் இருவரும் பிரிந்து வாழ்கின்ற போதிலும் விவாகரத்து பெறாமல் இருந்தனர்.

மகள் ஐஸ்வர்யாவுக்காக இறங்கி சென்ற ரஜினிகாந்த்; ஆனால்..கண்டுகொள்ளாத தனுஷ்!

மகள் ஐஸ்வர்யாவுக்காக இறங்கி சென்ற ரஜினிகாந்த்; ஆனால்..கண்டுகொள்ளாத தனுஷ்!

2வது திருமணம்?

இதனையடுத்து, தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள பிரபல சினிமா பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப்,

தனுஷ்-க்கு 2வது திருமணம்; பொண்ணு அவங்கதான் - கஸ்தூரி ராஜா முடிவு! | Dhanush Getting Second Marriage Info Viral

"சொந்த பந்தத்தில் இருந்து ஒரு பெண்ணை பார்த்து தனுஷுக்கு திருமணம் செய்து வைக்க கஸ்தூரி ராஜா முடிவு எடுத்துள்ளார். சினிமா சார்ந்து இருந்தால் சில சமயங்களில் பிரச்சனை ஏற்படும். அதனால் சொந்தத்தில் ஒரு பெண்ணை பார்த்துவிடலாம் என்று அவருடைய குடும்பம் நினைக்கலாம்.

விவாகரத்துக்கு பிறகு தனுஷுக்கு இரண்டாம் திருமணம் செய்து வைக்க அவருடைய அம்மா அப்பாவும் முடிவு செய்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார். இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.