18 வயது நடிகையுடன் கைகோர்க்கும் தனுஷ் - அடுத்து படு ரொமான்ஸில் இவருமா?

Dhanush Tamil Cinema Anikha Surendran
By Sumathi Dec 21, 2023 02:30 PM GMT
Report

தனுஷ் படம் மூலம் அனிகா ஹீரோயினாக என்ட்ரி கொடுக்கவுள்ளார்.

அனிகா சுரேந்திரன்

மலையாள சினிமாவில் கடந்த 2007 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா சுரேந்திரன்(18). தமிழில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால், விஸ்வாசம், நானும் ரவுடி தான், மிருதன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

dhanush 50

தொடர்ந்து, அண்மையில் அனிகா முதன்முதலாக ஹீரோயினாக நடித்த 'ஓ மை டார்லிங்', புட்ட பொம்மா திரைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில், நடிகர் தனுஷ் தனது 50வது படத்தை இயக்கி வருகிறார்.

மேடையில் வயதுக்கு மீறி அனிகா செய்த செயல் - விளாசும் நெட்டிசன்கள்!

மேடையில் வயதுக்கு மீறி அனிகா செய்த செயல் - விளாசும் நெட்டிசன்கள்!

தனுஷ் இயக்கம்

இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், எஸ்.ஜே. சூர்யா, சந்தீப் கிஷன், அபர்ணா பாலமுரளி நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது.

actress anikha-surendran

மேலும், மீண்டும் ஒரு படத்தை தனுஷ் இயக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் அவரது அக்கா மகன் ஹீரோவாக நடிக்க ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் கதாநாயகியாக அனிகா நடிப்பதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. சரத்குமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.