முன்னாள் மனைவிக்கு செக் வைக்கும் தனுஷ் - பிரபல நடிகரால் ஐஸ்வர்யாவுக்கு புது பிரச்சணை
லால் சலாம் படத்தில் இருந்து விஷ்ணு விஷால் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லால் சலாம்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனுசை வைத்து 'த்ரி' என்ற படத்தை இயக்கி இருந்தார். இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதில் 'ஒய் திஸ் கொலவெறி' பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டடித்தது. அதனைத் தொடர்ந்து, கௌதம் கார்த்தியை வைத்து வை ராஜா வை இயக்கி இருந்தார்.
அதன்பின் 8 ஆண்டுகளுக்குப்பிறகு மீண்டும் லால் சலாம் என்ற படத்தை இயக்கி வருகிறார். கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தில் நடிகர் விஷ்ணு விஷால், விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்க உள்ளனர். மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளார்.
விஷ்ணு விஷால் விலகல்
லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளார். அண்மையில் இப்படத்திற்கு பூஜை போடப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், திரைப்படத்தின் ஆடை வடிவமைப்பாளரான பூர்ணிமா ராமசாமி பிரீ ப்ரொடெக்ஷன் நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விலகுவதாக தனது ட்விட்டரில் பகிர்ந்து இருந்தார்.
தற்போது படத்தில் இருந்து விஷ்ணு விஷால் விலகி விட்டதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
படப்பிடிப்பு தளத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஓவர் ஆட்டிட்யூட் காட்டுவதால் இப்படி ஒருவர் பின் ஒருவராக வெளியேறி வருவதாக கூறப்படுகிறது. இதில், தனுஷ்
அடுத்து இயக்க உள்ள படத்தில் விஷ்ணு விஷாலை நடிக்க வைக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.