Saturday, Jul 12, 2025

என் நிர்வாண போட்டோக்களை லீக் செய்துட்டாங்க... - விஷ்ணு விஷால் பகீர் தகவல்... - ஷாக்கான ரசிகர்கள்...!

Vishnu Vishal Viral Photos
By Nandhini 3 years ago
Report

என் நிர்வாண போட்டோக்களை லீக் செய்துட்டாங்க என்று நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஷ்ணு விஷால்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷ்ணு விஷால். இவர் ‘வெண்ணிலா கபடி குழு’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். கடந்த 2018ம் ஆண்டு இவர் நடித்த சைக்காலஜி த்ரில்லரான ராட்சசன் நல்ல வரவேற்பை பெற்றது.

நடிகர் விஷ்ணு விஷால், ரஜினி நடராஜன் என்பவரை விவாகரத்து செய்த பிறகு, பிரபல பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா குட்டாவை திருமணம் செய்து கொண்டார்.

சில மாதங்களுக்கு முன்பு, படுக்கையில் இருந்தபடி நிர்வாண புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

என் நிர்வாண போட்டோக்களை லீக் செய்துட்டாங்க

தற்போது, நடிகர் விஷ்ணு விஷால் ‘கட்ட குஸ்தி’ என்ற நடித்து முடித்துள்ளார். இப்படம் வரும் டிசம்பர் 2ம் தேதி வெளியாக உள்ளது. 'கட்ட குஸ்தி' படத்தின் புரோமோஷன் சமீபத்தில் நடைப்பெற்றது.

அப்போது விஷ்ணு விஷால் நிர்வாண போட்டோ குறித்து விளக்கம் கொடுத்தார்.

இந்த போட்டோவை நான் 2 வருஷத்துக்கு முன்னாடியே எடுத்தேன். ஆனால், வெளியிட விரும்பவில்லை.

ரன்வீர் சிங் போட்டோ டிரெண்டான நிலையில், பொண்ணுங்க போடுறாங்க, ரன்வீர் சிங் போடுறாரு.. நீ போட்டா என்ன என சொல்லி என் மனைவி ஜுவாலா கட்டா தான் அந்த போட்டோக்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட சொன்னார்.

எவ்ளோ நாள் தான் நாமும் நல்ல பிள்ளையாகவே இருக்கிறது. நம்மை ஒரு சில கதாபாத்திரங்களை தாண்டி யாரும் யோசித்துப் பார்க்க மாட்டேன் என்கிறார்கள். அதற்காகத்தான் இப்படியொரு போட்டோஷூட் நடத்தினேன் என்றார்.

விஷ்ணு விஷால் இப்படி பேசியது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   

vishnu-nude-photo