5 வருடங்கள் கழித்து ஒரே மாதிரி உடை அணிந்து அருகருகே அமர்ந்திருந்த அனிருத், தனுஷ்..!
நடிகர் தனுஷ்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் திரைப்படங்களில் நடிகனாக நடித்து அறிமுகமாகி தற்போது பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என பல பிரிவுகளில் பணியாற்றி புகழ் பெற்றுள்ளார்.
தனுஷ் இந்திய சினிமாவை தொடர்ந்து ஹாலிவுட் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் பிரீமியர் ஷோ அமெரிக்காவில் நடந்த போது, செம்ம கெத்தாக மகன்களுடன் கோட்டு - சூட்டில் மாஸ் காட்டினார் நடிகர் தனுஷ்.
இதனையடுத்து, மும்பையில் நடந்த நிகழ்ச்சிக்கு அனைவருமே கோட்டு - சூட்டு வந்தனர். நடிகைகள் படு மாடர்ன் உடையில் வந்தனர். ஆனால், நடிகர் தனுஷ் மிகவும் எளிமையாக கதர் வேஷ்டி சட்டையில் வந்து அனைவரையும் மிரள வைத்தார்.
இதன் பின், நடைபெற்ற ‘தி கிரே மேன்’ பட புரோமோஷன் நிகழ்ச்சியில் வேஷ்டி-சட்டை அணிந்து வந்து அசத்தினார். இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானது.

ஒரே மாதிரி உடையில் தனுஷ் - அனிருத்
தனுஷ் தற்போது மித்திரன் இயக்கத்தில் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி வெளியாக இருக்கிறது.5 ஆண்டுகள் கழித்து இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் அனிருத்.
இந்நிலையில், சமீபத்தில் ‘திருச்சிற்றம்பலம்’ பட இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இசை வெளியீட்டு விழாவுக்கு வெள்ளை வேட்டி, சட்டையில் வந்தார் தனுஷ். ஆனால், அனிருத்தும், தனுஷ் போன்றே வெள்ளை வேட்டி, சட்டையில் வந்திருந்தார். இரண்டு பேரும் ஒரே மாதிரி உடை அணிந்து அருகருகே அமர்ந்திருந்த புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.
#DnA?#Thiruchitrambalam Audio launch@dhanushkraja @anirudhofficial pic.twitter.com/7M3z0DyCiJ
— Sun Pictures (@sunpictures) July 30, 2022
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan
ஷிரந்தி ராஜபக்சவுக்கு பயணத் தடை...! விமான நிலையத்திலேயே கைதாகும் அபாயம் - சிக்கலில் மகிந்த IBC Tamil