தனுஷ் பிறந்தநாள் இன்று - அதிகாலையில் ஐஸ்வர்யா எங்கு சென்றார்ன்னு தெரியுமா? வைரலாகும் புகைப்படம்

Dhanush Aishwarya Rajinikanth
By Nandhini Jul 28, 2022 09:49 AM GMT
Report
160 Shares

தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து

நடிகர் தனுஷிம், ஐஸ்வர்யாவும் விவாகரத்து பெற்று பிரிந்து செல்வதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். இந்த அறிவிப்பால், ஒட்டுமொத்த சினிமாத்துறையும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த அறிவிப்பை கேட்ட நடிகர் ரஜினிகாந்த், யாரிடம் பேசாமல் வீட்டை விட்டு வெளியே சென்றார். இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானார். தந்தையிடம் போனில் தொடர்பு கொண்டு பேசிய ஐஸ்வர்யாவை தீட்டித் தீர்த்துவிட்டார்.

தந்தையின் கோபத்தை கண்டு மிரண்டு போன ஐஸ்வர்யா, கணவர் தனுஷுடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்தார். ஆனால், நடிகர் தனுஷ் மீண்டும் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்று கறாரா தெரிவித்து விட்டார். இதனையடுத்து, இரு குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களும், நண்பர்களும் இவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்து வருகின்றனர்.

aishwarya-rajinikanth-dhanush

தனுஷ் பிறந்தநாள்

நடிகர் தனுஷ் இன்று தனது 39-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கோலிவுட், டோலிவுட், பாலிவுட் மற்றும் ஹாலிவுட் என அசத்தி வரும் நடிகர் தனுஷுக்கு உலகம் முழுக்க இருக்கும் அவரது ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

தனுஷின் பிறந்தநாளான இன்று அவருக்கு வாழ்த்து தெரிவிக்கு வகையில் 'வாத்தி' படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இப்போஸ்டர் தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தனுஷின் பிறந்தநாள் விருந்தாக ரசிகர்களுக்கு இப்படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது.

கோவிலுக்குச் சென்ற ஐஸ்வர்யா

இந்நிலையில், ஐஸ்வர்யா தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில், இன்று அதிகாலை அம்மன் சிலைக்கு முன்பு நின்று சாமி தரிசனம் செய்துள்ளார்.

அதை பார்த்த ரசிகர்கள், தனுஷ் அண்ணாவுக்காக அம்மனிடம் பிரார்த்தனை செய்தீர்களா அண்ணி...? வாழ்த்துக்கள் தனுஷ் என்று ஒரு பதிவிட்டிருக்கலாமே. செஸ் ஒலிம்பியாட் பற்றி மட்டும் டுவிட் செய்த தலைவர் ஏன் மருமகனை வாழ்த்தி டுவிட் போடவில்லை என்று கேள்வி கேட்டு கமெண்ட் செய்து வருகிறார்கள். சமீபத்தில் ஐஸ்வர்யாவும், தனுஷும் சேர்ந்து வாழப்போவதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

aishwarya-rajinikanth-dhanush