நீண்ட இடைவெளிக்கு பிறகு இணையும் தனுஷ் ,சிவகார்த்திகேயன் ? வைரலாகும் போட்டோ!

Dhanush Sivakarthikeyan Viral Photos
By Vidhya Senthil Nov 23, 2024 11:23 AM GMT
Report

தமிழ் சினிமாவில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 தனுஷ் 

சின்னத்திரையின் மூலம் தனது நடிப்பு திறமையைக் காட்டி வெள்ளித்திரையில் முன்னணி நடிகராகப் இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய 3 படத்தில் சிறிய வேடத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார்.

dhanush and sivakarthikeyan

அதன் பிறகு மெரினா , வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட படங்கள் அடித்துத்தடுத்து வெற்றியை கொடுத்தனர்.தமிழ் சினிமாவில் தற்பொழுது தவிர்க்க முடியாத நடிகராக சிவகார்த்திகேயன் இருந்து வருகிறார். முன்னணி நடிகராக தனுஷுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே நெருக்கமான நட்பு இருந்து வந்தது நம்மில் பலருக்கும் தெரியும்.

என் தந்தை ஒரு லெஜெண்ட்..ஏ.ஆர்.ரஹ்மான் குறித்து வதந்தி - மகன் அமீன் சொன்ன ஒரு வார்த்தை!

என் தந்தை ஒரு லெஜெண்ட்..ஏ.ஆர்.ரஹ்மான் குறித்து வதந்தி - மகன் அமீன் சொன்ன ஒரு வார்த்தை!

நடிகர் தனுஷ் சிவகார்த்திகேயனை தனது தம்பி என்றும், பின்னாளில் தமிழ் சினிமாவில் அவர் மிகப்பெரிய ஹீரோவாக வளர்ந்து நிற்பார் என பேசியிருந்தார்.இந்த நிலையில் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் இடையே சில ஆண்டுகளாக அந்த நெருக்கம் இல்லை என்றுதான் கூற வேண்டும்.

சிவகார்த்திகேயன் 

இருவருக்கும் இடையே பிரச்சனை காரணமாகப் பேசிக்கொள்வதில்லை என்று பல செய்திகள் வெளியானது. இந்த சூழலில் தனுஷ் இயக்கி, நடித்து வரும் இட்லி கடை படத்தின் தயாரிப்பாளர் இல்ல திருமண நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது.இதில் நடிகர் தனுஷ், சிவகார்த்திகேயன், நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர்.

dhanush and sivakarthikeyan event photo viral

இந்த நிகழ்ச்சியில் மனைவி ஆர்த்தியுடன் பங்கேற்றார் சிவகார்த்திகேயன். தனுஷ் ,சிவகார்த்திகேயன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி மூவரும் சிரித்த முகத்துடன் வணக்கம் கூறி பேசிக்கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இதனைக் கண்ட நெட்டிசன்கள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளனரா என கேள்வி எழுப்பியுள்ளனர்.ஆனால் இது குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.