அப்பா நடிப்பில் அசுரன்- பையன் படிப்பில் அசுரன்!! +2 பொதுத்தேர்வில் மார்க்கை அள்ளிய யாத்ரா!!
நடிகர் தனுஷின் மகன் யாத்ராவின் 12ஆம் வகுப்பு பொது தேர்வு மார்க் குறித்த தகவல் ஒன்று சமூகவலைத்தளத்தில் பரவி வருகின்றது.
தனுஷ்
தமிழ் சினிமாவில் தாண்டி, தற்போது இந்திய மொழி படங்களில் பெரும் ஆளுமையாக உருவெடுத்துள்ளார் தனுஷ். தமிழ், ஹிந்தி, தெலுங்கு மொழி படங்களில் ஹிட் கொடுத்துள்ள அவர், ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.
இயக்கம் பக்கமும் தற்போது தனது கவனத்தை திருப்பியுள்ள தனுஷ், ராயன் படத்தையும், அதனை தொடர்ந்து "நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்" போன்ற படங்களை இயக்கி வருகின்றார். நடிப்பு, இயக்கம் என சினிமாவில் சுழன்றடித்து பணியாற்றி வரும் தனுஷின் தனிப்பட்ட வாழக்கை சற்று கசப்பானதாக உள்ளது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்தை 2004-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்த தனுஷ், 18 ஆண்டுகள் கழித்து தற்போது விவகாரத்தில் பந்தத்தை முடித்துள்ளார். ரஜினியின் தீவிர ரசிகர், காதல் திருமணம் என சிறப்பாக சென்ற வாழ்வில் எந்த இடத்தில் பிரச்சனை உருவானது என்பது தெரியவில்லை.
யாத்ரா மார்க்
இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். யாத்ரா மற்றும் லிங்கா. அம்மா, அப்பா இருவரின் அரவணைப்பிலும் தான் மகன்கள் வளர்ந்து வருகின்றார்கள். நேற்று தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது.
அதில், நடிகர் தனுஷின் மூத்த மகன் யாத்ராவின் மதிப்பெண் என ஒரு தகவல் பரவுகிறது. 600'க்கு அவர் 569 மதிப்பெண்கள், அதாவது மொழிப்பாடத்தில் 98, ஆங்கிலம் - 92, கணக்கு - 99, பிசிக்ஸ் - 91, கேமிஸ்ட்ரி - 92, பயாலஜி - 97 மதிப்பெண் என அவர் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இது உறுதிப்படுத்தப்பட்ட தகவலே இல்லை. சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவி வருகின்றது.