பெற்றோருக்கு நேர்ந்த அவமானம்; தனுஷ், ஐஸ்வார்யாவை பிரியக் காரணம் இதுதான் - போட்டுடைத்த பிரபலம்!
ஐஸ்வர்யாவை தனுஷ் பிரிந்தது குறித்து சில தகவல் வெளியாகியுள்ளது.
தனுஷ்-ஐஸ்வர்யா
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த ஆண்டு பிரிந்து வாழப்போவதாக அறிவித்தனர். அதன்பின் இருவரும் தங்களது கேரியரில் கவனம் செலுத்தி வருகின்றனர். மகன்கள் இருவரும் தாய் ஐஸ்வர்யாவுடன் உள்ளனர்.
இந்நிலையில் இருவர் பிரிவு குறித்து செய்யாறு பாலு வீடியோ ஒன்றில், “தனுஷின் பெற்றோர் ரஜினியின் வீட்டுக்கு சென்றபோது ஒருவகையில் அவர்கள் அவமானப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அது நடந்திருக்கலாம். அது தனுஷுக்கு தெரியவந்தது.
பிரிவின் காரணம்?
தனுஷ் தனது குடும்பத்தின் மீது அளவு கடந்த பாசம் வைத்திருப்பவர். ஒரு இடத்தில் தனது தாயோ, தந்தையோ கண்ணியமாக நடத்தப்படாவிட்டால் கோபம் வரும். இந்த விஷயம் தனுஷ் ஐஸ்வர்யாவுக்குள் பிரச்னையை ஏற்படுத்தியது.
மேலும் தனது தாய், தந்தையையா அவமானப்படுத்துகிறீர்கள் என்ற ஆவேசத்தில்தான் போயஸ் கார்டனில் ஒரு மாளிகையையே தனுஷ் கட்டியிருக்கிறார்” எனத் தெரிவித்துள்ளார்.