ஹாலிவுட் பட புரோமோஷனில் வேஷ்டி - சட்டை அணிந்து வந்த கெத்து காட்டிய தனுஷ் - வைரலாகும் மாஸ் வீடியோ

Dhanush
By Nandhini Jul 21, 2022 06:44 AM GMT
Report

நடிகர் தனுஷ்

பிரீமியர் ஷோ அமெரிக்காவில் நடந்த போது, செம்ம கெத்தாக மகன்களுடன் கோட்டு - சூட்டில் மாஸ் காட்டினார் நடிகர் தனுஷ். இதனையடுத்து, இன்று மும்பையில் நடந்த நிகழ்ச்சிக்கு வந்த அனைவருமே கோட்டு - சூட்டு வந்தனர். நடிகைகள் படு மாடர்ன் உடையில் வந்தனர். ஆனால், நடிகர் தனுஷ் மிகவும் எளிமையாக கதர் வேஷ்டி சட்டையில் வந்து அனைவரையும் மிரள வைத்துள்ளார்.

மும்பை விமானநிலையத்திற்கு வந்த நடிகர் தனுஷ், ஸ்டைலான பேண்ட் மற்றும் டீசர்ட்டுடன் வந்து இறங்கினார். இதனையடுத்து, நடைபெற்ற ‘தி கிரே மேன்’ பட புரோமோஷன் நிகழ்ச்சியில் வேஷ்டி-சட்டை அணிந்து வந்து அசத்தியுள்ளார்.

தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் வாழ்த்து தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.  

dhanush