Swiggy ஊழியரை நலம் விசாரித்த டிஜிபி சைலேந்திர பாபு
கோவையில் ஸ்விக்கி ஊழியரை தாக்கிய போக்குவரத்து காவலரை டிஜிபி உத்தரவின் பேரில் போலீசார் கைது செய்தனர்.
ஸ்விக்கி ஊழியர் மீது தாக்குதல்
கோவையில் பீளமேட்டில் உள்ள ஃபன்மால் அருகே Swiggy-யில் உணவு டெலிவரி செய்யும் இளைஞர் மோகன சுந்தரம் என்பவரை போக்குவரத்து காவலர் சதீஸ் கன்னத்தில் அறைந்து தாக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலானது.
கோவை மாவட்டம் நீலாம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன சுந்தரம்.இவர் பன்மால் அருகே சென்ற போது தனியார் பள்ளி வாகனம் ஒன்று பெண் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது.
இதை பார்த்த இளைஞர் மோகன சுந்தரம் அந்த வாகனத்தை நிறுத்தி வாகன ஓட்டுநரிடம் நியாயம் கேட்க முயன்றுள்ளார்.
அப்போது அங்கு வந்த போக்குவரத்து காவல் சதீஸ் என்ன நடந்தது என்று கூட கேட்காமல் இளைஞர் மோகன சுந்தரத்தை கன்னத்தில் அறைந்து தாக்கியுள்ளார்.
அப்போது அவர்,நீ யார்? அந்த பள்ளி வாகனம் யாருடையது என தெரியுமா? என்று கேட்டு சம்மந்தப்பட்ட வாகனத்தை அனுப்பி வைத்துள்ளார்.இதையடுத்து இளைஞர் தாக்கிவிட்டு போக்குவரத்து காவல் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
டிஜிபி சைலேந்திர பாபு ஆறுதல்
இந்த காட்சிகள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது.இதையடுத்து பாதிக்கப்பட்ட இளைஞரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட டிஜிபி சைலேந்திர பாபு ஆறுதல் கூறினார்.
பின்பு இச்சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார். இதையடுத்து காவலர் சதீஷ் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.