டிஐஜி விஜயகுமாரின் உடலை தோளில் சுமந்து சென்ற டிஜிபி சங்கர் ஜிவால் - உறவினர்கள் கதறல்!
உயிரிழந்த விஜயகுமாரின் உடலை டிஜிபி சங்கர் ஜிவால் தோலில் சுமந்து சென்றார்.
டிஐஜி உயிரிழப்பு
கோவை சரக டிஐஜி விஜயகுமார் இன்று காலை 6 .50 மணிக்கு தற்கொலை செய்து கொண்டுள்ளார். காலை 6 மணிக்கு வழக்கம் போல் நடைபயிற்சி முடித்துவிட்டு முகாம் அலுவலகத்திற்கு வந்த அவர்,
மெய் பாதுகாவலர் துப்பாக்கியை வாங்கி தன் தலையில் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் அவரின் உடல் உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில்,
டிஜிபி அஞ்சலி
உடற்கூறாய்வு முடிந்து அவரின் சொந்த ஊரான தேனிக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அவரது உடலுக்கு தமிழக காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் அவரது தயாா் மற்றும் சகோதரிகளுக்கு தனது ஆறுதலை தெரிவித்தார். பின்னர் விஜயகுமார் உடலை டிஜிபி சங்கர் ஜிவால் தோளில் சுமந்து சென்றார்.
இதை தொடர்ந்து அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்ய ஊர்வலமாக அல்லி நகரம் மின்மயானம் நோக்கி கொண்டு செல்லப்படுகிறது.