டிஐஜி விஜயகுமார் உடலுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் நேரில் அஞ்சலி..!
தேனி ரத்தினம் நகரில் வைக்கப்பட்டுள்ள டிஐஜி விஜயகுமார் உடலுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
டிஜிபி நேரில் அஞ்சலி
கோவை சரக டிஐஜி விஜயகுமார் இன்று காலை 6 .50 மணிக்கு தற்கொலை செய்து கொண்டுள்ளார். காலை 6 மணிக்கு வழக்கம் போல் நடைபயிற்சி முடித்துவிட்டு முகாம் அலுவலகத்திற்கு வந்த அவர், மெய் பாதுகாவலர் துப்பாக்கியை வாங்கி தன் தலையில் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் இன்றி ஒட்டுமொத்த காவல்துறையையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த நிலையில் அவரின் உடல் உடற்கூறாய்வு செய்த நிலையில் சொந்த ஊரான தேனி மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.
டிஐஜி விஜயகுமார் உடலுக்கு தமிழக காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் அவரது தயாா் மற்றும் சகோதரிகளுக்கு தனது ஆறுதலை தெரிவித்தார்.