பூனையின் ஹை-ஃபை ஆசிர்வாதம்.. கோயிலில் குவியும் பக்தர்கள் - என்ன காரணம்?
சீனாவில் உள்ள புத்த கோவில் பூனையிடம் ஆசீர்வாதத்தைப் பெறக் கோயிலில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
சீனா
கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தின் சுஜோவில் சியுவான் கோவில் உள்ளது. இது புத்த கோவிலாகும். ஒரு இந்த கோவிலில் பூனையை ஆசீர்வாதம் செய்து வருகிறது.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.அந்த வீடியோவில், பூனையின் கழுத்தில் ஒரு தங்க நிற சங்கிலி அணிவிக்கப்பட்டு உள்ளது.
பூனை
மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் தன் பாதத்தை நீட்டி ஹை-ஃபை போன்று செய்யும்.இவ்வாறு, பூனையிடம் ஆசீர்வாதம் பெறுவதன் மூலம் அதிர்ஷ்டம் நம்மைத் தேடி வரும் என்று நம்பப்படுகிறது.
இதற்காக சுஜோவில் சியுவான் கோவிலுக்கு உள்ளூர்வாசிகள் மட்டுமின்றி வெளிநாட்டை சேர்ந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று வணங்கிச் செல்கின்றனர்.