பக்தர்கள் கனகசபை மீது தரிசனம் செய்யலாமா? உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

Cuddalore Madras High Court
By Sumathi Aug 21, 2024 07:44 AM GMT
Report

நடராஜர் கோவிலில், பக்தர்கள் கனகசபை மீது தரிசனம் செய்வது தொடர்பான தீர்ப்பு உத்தரவிடப்பட்டுள்ளது.

கனகசபை மீது தரிசனம்

சிதம்பரம், நடராஜர் கோவிலில், ஆனி திருமஞ்சன விழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அப்போது, கனகசபை மீது நின்று பக்தர்கள் தரிசனம் செய்ய

chidambaram temple

அனுமதிக்க கோரி சம்பந்தமூர்த்தி ராமநாதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

பல இயற்கை பேரழிவுகளை சந்தித்த போதும் கலங்காமல் இருக்கும் கடலூரின் வரலாறு தெரியுமா?

பல இயற்கை பேரழிவுகளை சந்தித்த போதும் கலங்காமல் இருக்கும் கடலூரின் வரலாறு தெரியுமா?

நீதிமன்ற தீர்ப்பு

அப்போது, பொது தீட்சிதர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், சிதம்பரம் நடராஜர் கோவிலில், கனகசபை மீது நின்று பக்தர்கள் தரிசனம் செய்ய எந்த தடையும் இல்லை. ஆறு கால பூஜை நேரத்தில் மட்டும் பக்தர்கள் கனகசபையில் அனுமதிக்கப்படுவதில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

பக்தர்கள் கனகசபை மீது தரிசனம் செய்யலாமா? உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு! | Devotees Climbing Kanagasabai Chidambaram Temple

தொடர்ந்து அறநிலையத் துறை தரப்பில், ”கனகசபை மீது நின்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதித்த அரசாணையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் எந்த தடை உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. ஆனால், விழா காலங்களில் பக்தர்களை கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய அனுமதிப்பதில்லை.” என்று குறிப்பிடப்பட்டது.

இதனை பதிவு செய்துக்கொண்ட நீதிபதிகள், ஆறு கால பூஜை நேரத்தை தவிர மற்ற நேரங்களில் பக்தர்கள் கனகசபை மீது தரிசனம் செய்வதை தடுக்க கூடாது என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.