நடராஜர் கோவில் கனகசபையில் பக்தர்களுக்கு அனுமதி - நீடிக்கும் பதற்றம்!
நடராஜர் கோவில் கனகசபையில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கனகசபை
சிதம்பரம், நடராஜர் கோவிலில் ஆனித் திருமஞ்சன தரிசனம், ஆருத்ரா தரிசனம் என ஆண்டுக்கு 2 முறை நடைபெற்று வருகிறது. அப்போது, மூலவர் சபையிலிருந்து வெளியே வரும் நடைமுறையால் 4 நாட்களுக்கு கனக சபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
மேலும், தொடர்ந்து கடந்த 24-ந் தேதி முதல் இன்று வரை கனக சபையில் ஏறி தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்ற அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டது. அதனையடுத்த புகாரின் பேரில் அறநிலையத்துறையினர் கோவிலுக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
பக்தர்களுக்கு அனுமதி
அதில் அதிகாரிகளுக்கும், தீட்சிதர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அதன் அடிப்படையில், 10 தீட்சிதர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், ஆனி திருமஞ்சன தரிசன உற்சவம் முடிந்த நிலையில் இன்று (புதன்கிழமை) காலை பால் நிவேத்ய பூஜை முடிவு பெற்றவுடன்,
காலை 7 மணிக்கு கனக சபை மீது பக்தர்கள் ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.