குழந்தைகளுக்கு திருமணம்; கையில் தாலியுடன் சிறுவன் - அம்பலமான அதிர்ச்சி வீடியோ காட்சிகள்!
குழந்தை திருமணம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தை திருமணம்
சிதம்பரம், நடராஜர் கோவில் தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு குழந்தை திருமணம் நடைபெற்றதாக சர்ச்சை வெடித்தது. தொடர்ட்ந்து, குழந்தை திருமணம் நடைபெறவில்லை என தீட்சிதர்கள் தரப்பில் தெரிவித்தனர்.
மேலும், பொய்யான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக ஆளுநர் பேசியிருந்தார். அதனையடுத்து, தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த் தலைமையிலான குழுவினர் சிதம்பரம் பகுதியில் முகாம் இட்டு விசாரணையில் ஈடுபட்டு வந்தார்.
வீடியோ காட்சிகள்
அண்மையில், குழந்தை திருமணம் நடைபெற்றதற்கான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருந்தன. இந்நிலையில், தற்போது சிறுமி ஒருவருக்கு, சிறுவன் தாலி கட்டுவதற்கு கையில் தாலி வைத்திருக்கும்
3 வினாடிகள் உள்ள வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.