இருவிரல் சோதனை, குழந்தைகள் திருமணம் அம்பலம் - புகைப்படங்கள் வெளியீடு!
குழந்தைகளுக்கு திருமணம் நடைபெற்றதாக புகார் எழுந்த நிலையில் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
குழந்தை திருமணம்
சிதம்பரத்தில் கடந்த ஆண்டு தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு திருமணம் நடைபெற்றதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இதனால், தீட்சிதர்கள் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து, குழந்தை திருமணம் செய்த சிறுவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தியதாக தகவல். குழந்தை திருமண விவகாரத்தில் தடை செய்யப்பட்ட இருவிரல் பரிசோதனை நடந்ததாக ஆளுநர் பரபரப்பு புகாரை கூறினார்.
நடவடிக்கை?
இதுகுறித்து கோயில் வழக்கறிஞர் சந்திரசேகர் தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு குழந்தை திருமணமே நடைபெறவில்லை எனக் கூறியிருந்தார். இதற்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு சமூகநல அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சியின் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், தேசிய குழந்தைகள் ஆணைய உறுப்பினர் ஆனந்த், இருவிரல் பரிசோதனை நடைபெற்றது உறுதி என கூறியிருந்தார். சிதம்பரத்தில் தீட்சிதர்கள் குழந்தைகளுக்கு திருமணம் செய்துவைத்த புகைப்படங்கள் வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.