நாக்கை அறுத்து அம்மனுக்கு பலி கொடுத்த நபர் - ஓர் அதிர்ச்சி சம்பவம்!
அம்மன் கோயிலில் தனது நாக்கை அறுத்து காணிக்கை கொடுத்த நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அம்மன் கோயில்
உத்தரப் பிரதேசம், கவுஷாம்பி பகுதியில் வசிப்பவர் சம்பத்(38). இவர் மானிவி பன்னோ தேவி. இருவரும் சம்பவதன்று, அப்பகுதியில் உள்ள ஸ்ரீலதா அம்மன் கோயிலுக்கு சென்றுள்ளனர்.

அங்கு அருகே உள்ள கங்கை நதியில் புனித நீராடியுள்ளனர். அங்கு சில சடங்குகளை செய்த பின்னர் அம்மன் கோயிலுக்கு சென்று பிரகாரத்தை சுற்றி வந்துள்ளார். பின்னர் திடீரென்று யாரும் எதிர்பாராத விதமாக கையில்
நாக்கை அறுத்து காணிக்கை
கத்தியை எடுத்துக்கொண்டு தனது நாக்கை அறுத்து அதை கோயிலில் பலி காணிக்கையாக தந்துள்ளார். இந்த திடீர் செயலால் மனைவி உள்ளிட்ட அருகே இருந்தவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
அதன்பின் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இவர் தற்போது மருத்துவமனையில் தீவிரமாக சிகிச்சை பெற்று வருகிறார். தனது கணவர் இதுபோன்று நாக்கை அறுத்து பலி கொடுப்பார் என நினைத்து பார்க்கவே இல்லை.
இது குறித்து அவர் என்னிடம் ஏதும் தெரிவிக்கவில்லை. இப்படி இவர் செய்வார் என நான் நினைத்து பார்க்கவில்லை என மனைவி பன்னோ தேவி கூறியுள்ளார்.