பொத்தி பொத்தி வைத்திருந்த விராட் - போட்டுடைத்த டிவில்லியர்ஸ்..! 2-வது முறையாக கர்ப்பமான அனுஷ்கா..!
இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய நட்சத்திரமாக திகழ்கிறார் விராட் கோலி.
விராட் அனுஷ்கா
ஆனால், தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஒய்வு வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
BCCI'யும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளது. அதே போல, கடந்த 22-ஆம் தேதி நடைபெற்ற ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு நேரில் அழைப்பு விடுக்கப்படும், விராட் மற்றும் அவரது மனைவியும் பிரபல பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மா பங்கேற்கவில்லை.
இதனை வைத்து ரசிகர்கள் பலரும் அவர்கள் மீண்டும் பெற்றோர்கள் ஆகவுள்ளனர். அனுஷ்கா கர்ப்பமாக இருக்கின்றார். அதன் காரணமாக தான், அவர்கள் பொதுவெளியில் எங்கும் பங்கேற்கவில்லை என்றெல்லாம் செய்திகள் வெளியானது.
ஆனால், இது குறித்து தம்பதிகள் எந்த தகவலும் கூறாமலே தவிர்த்து வந்தனர். இந்த நிலையில் தான், இது குறித்து தென்னாபிரிக்கா அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரரும், RCB அணி மூலம் விராட் கோலிக்கு நெருங்கிய நண்பரான டிவில்லியர்ஸ் தகவல் தெரிவித்துள்ளார்.
AB De Villiers said, "Virat Kohli and Anushka Sharma are expecting their 2nd child, so Virat is spending time with his family". (AB YT). pic.twitter.com/qurRKnFK1q
— Virat Kohli Fan Club (@Trend_VKohli) February 3, 2024
தனது யூடியூப் சேனலில் விராட் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த டிவில்லியர்ஸ், விராட் மற்றும் அனுஷ்காவே இந்த செய்தியை உறுதிப்படுத்தியதாக குறிப்பிட்டு, தான் கோலிக்கு மெசேஜ் அனுப்பியதாகவும் கூறினார்.
மேலும், தன்னால் அதிகளவில் எந்த செய்தியும் தர முடியாது என்ற டிவில்லியர்ஸ், விராட் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார் என்று தெரிவித்தார்.