தேவி ஸ்ரீ பிரசாத்தை ரகசிய திருமணம் செய்த பிரபல நடிகை?
இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், பிரபல நடிகையுடன் ரகசிய திருமணம் செய்துகொண்டதாக தகவல் வெளியாகியது.
தேவி ஸ்ரீ பிரசாத்
தமிழ், தெலுங்கு மொழிகளில் பல திரைப்படங்களுக்கு இசையமைப்பாளராக பணியாற்றியவர் தேவி ஸ்ரீ பிரசாத். இவரது இசையில் திரைப்பட பாடல்கள் அனைத்தும் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. சமீபத்தில் புஷ்பா திரைப்படத்தில் ஊ சொல்றியா மாமா என்ற பாடல் ஹிட் கொடுத்தது.
திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் இவர் சில நடிகைகளுடன் ஏற்கெனவே கிசுகிசுக்கப்பட்டார். இந்நிலையில் தேவி ஸ்ரீ பிரசாத் தெலுங்கு நடிகை பூஜிதா பொன்னடாவை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியானது.
ரகசிய திருமணம்
இது குறித்து நடிகை புஜிதா விளக்கம் அளித்துள்ளார். அதில், ‘‘நான் யாரையும் காதலிக்கவில்லை. சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. நான் அவரை ரகசிய திருமணம் செய்துகொண்டதாகக் கூறுவதும் பொய்.
இப்படிப்பட்ட தவறான தகவல்களை எங்கிருந்து உருவாக்குகிறார்கள் என்று தெரியவில்லை’’ என்று கூறியுள்ளார். பூஜிதா பொன்னடா விசாகப்பட்டினத்தில் தெலுங்கு குடும்பத்தில் பிறந்து சென்னையில் வளர்ந்தார்.
முக்கியமாக தெலுங்கு சினிமாவில் நடித்து வருகிறார்.
ரசிகர்களை கவருவதற்காக தொடர்ந்து போட்டோஷூட் செய்து தனது இணையதள பக்கங்களில் பகிர்ந்து வருவார். அவருக்கு ஊடகங்களில் பெரும் ரசிகர்களும் உண்டு. இவர் தமிழில் ’செவன்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்போது ’பகவான்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.