தனது மகன்களுக்காக பாடல்வரி எழுதி மேடையில் தாலாட்டு பாடிய தனுஷ், வைரலாகும் இமோஷனல் வீடியோ

Swetha Subash
in பிரபலங்கள்Report this article
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ் காதல் திருமணம் செய்து கொண்ட தனது மனைவி ஐஸ்வர்யாவை 18 வருட திருமண வாழ்விற்கு பிறகு பிரிவதாக கடந்த ஜனவரி மாதம் சமூக வலைதளத்தில் அறிவித்தார்.
இந்த செய்தி ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் என அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்நிலையில் டிஎஸ்பி என்றழைக்கப்படும் பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் நடத்திய ராக் வித் ராஜா என்ற லைவ் மியூசிக் கான்செர்ட் இசைஞானி இளையராஜா முன்னிலையில் நேற்று நடைபெற்றது.
பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சிக்கு நடிகர் தனுஷ் அவரது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் இளையராஜா ‘நிலா அது வானத்து மேலே’ பாடலை பாட தனுஷை மேடைக்கு அழைத்தார்.
அந்த பாடலை தனுஷ் யுவன் சங்கராஜாவுடன் இணைந்து பாடியப்பின் இளையராஜாவிடம் ஒரு கோரிக்கையை வைத்தார்.
அதாவது, நிலா அது வானத்து மேலே பாடலை கேட்டப்பின், ஒரு தாலாட்டை மிஸ் பண்ணிட்டோமே என்று எனக்குள்ளே ஒரு ஆதங்கம் இருந்தது.
அதனால் யாத்ரா லிங்காவை வைத்து ஓரிரு வரிகளை எழுதி பாடலாம் என்று இருக்கிறேன் என கூறினார்.
இளையராஜாவும் இதற்கு அனுமதி வழங்க, மேடையில் தனது மகன்களுக்காக மிகவும் உணர்ச்சிப்பூர்வாக பாடிய தனுஷ் காண்போரை இமோஷனல் ஆக வைத்துள்ளார்.
தனது அப்பா பாடிய பாட்டை கேட்டு யாத்ராவும் லிங்காவும் கீழிருந்து மகிழ்ந்தபடி சிரித்து ஆரவாரம் செய்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.