தேவரா ரிலீஸ் கொண்டாட்டம் - தலையை வெட்டி ரத்த அபிஷேகம் செய்த ரசிகர்கள்

Vedhika Janhvi Kapoor N. T. Rama Rao Jr. Devara: Part 1
By Karthikraja Sep 27, 2024 01:10 PM GMT
Karthikraja

Karthikraja

in சினிமா
Report

தேவரா பட கொண்டாட்டத்தில் ரசிகர்களின் செயலுக்கு நடிகை வேதிகா ஆவேசமடைந்துள்ளார்.

தேவாரா

ஜுனியர் என் டி ஆர் நடிப்பில், கொரட்டாலா சிவா இயக்கத்தில் தயாரான தேவரா படம் இன்று திரைக்கு வந்துள்ளது. படத்தில் சைஃப் அலி கான், ஜான்வி கபூர் போன்றோர் நடித்துள்ளனர்.

devara celebration by junior ntr fans

ஜுனியர் என் டி ஆருக்கு தெலுங்கு சினிமாவில் பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு. தேவரா படம் வெளியாகும் திரையரங்கு முன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 

பந்தயத்தில் கட்சிக்காக காலை வெட்டிய தொண்டர் - சசிகலா, எடப்பாடி பழனிசாமி செய்த செயல்

பந்தயத்தில் கட்சிக்காக காலை வெட்டிய தொண்டர் - சசிகலா, எடப்பாடி பழனிசாமி செய்த செயல்

தீ விபத்து

திரையரங்கு முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய போது அங்கு இருந்த 90 அடி ஜுனியர் என் டி ஆர் கட் அவுட்டில் தீ பற்றி எரிந்தது. தீயணைப்பு துறையினர் சிறிது நேரத்தில் வந்து தீயை முழுமையாக கட்டுப்படுத்தினர். 

devara release goat sacrification

இதே போல் அதிகாலை முதல் காட்சியின் போது மற்றொரு திரையரங்கு முன் கூடியிருந்த ரசிகர்கள் ஆட்டை பலியிட்டு அதன் தலையை தனியாக எடுத்து தேவாரா பட கட்அவுட்டில் ஆட்டின் ரத்தத்தை தெளித்தனர். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியான நிலையில் பலரும் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

வேதிகா கண்டனம்

இது குறித்து ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ள நடிகை வேதிகா, "இது மிகவும் கொடியது. அந்த பாவப்பட்ட குழந்தைக்காக எனது இதயம் ரத்தம் வடிக்கிறது. அதிகப்படியான சித்ரவதை, யாருக்குமே இது நடக்கக்கூடாது. உலகத்தில் குரலற்று அப்பாவியாக இருக்கும் ஜீவனை வதைக்க எப்படி முடிகிறது? இது வேறு எந்த உயிரினத்திற்கும் ஒருபோதும் நடக்கக்கூடாது. இந்த வாயில்லா உயிரினத்தின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். 

கடவுளின் கரங்களில் ஓய்வெடுங்கள். எங்களை மன்னிக்கவும், நாங்கள் உங்களைத் தவறிவிட்டோம். ரசிக மனப்பான்மையில் இனி விலங்குகள் பலியிடப்படாது என்று நம்புகிறேன், இதுபோன்ற வன்முறையை யாரும் பாராட்டப் போவதில்லை, தயவுசெய்து நிறுத்துங்கள்" என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.