தேவர் ஜெயந்திவிழா: தேவர் சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை - பலத்த பாதுகாப்பு
Tamil nadu
Madurai
Durai Murugan
Anbil Mahesh Poyyamozhi
I. Periyasamy
By Sumathi
தேவர் ஜெயந்தி வழாவை முன்னிட்டு, அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.
தேவர் ஜெயந்தி
ராமநாதபுரம், முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, 60 வது குருபூஜை கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள், அமைப்புகளை சேர்ந்தவர்கள் போன்ற பலர் அவரது உருவப் படத்திற்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அமைச்சர்கள் மரியாதை
இந்நிலையில், இவ்விழாவை முன்னிட்டு மதுரை, கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு அரசு சார்பில் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.