தேவர் ஜெயந்தி விழா: காவல்துறை வாகனத்தின் மீது ஏறி குத்தாட்டம் போட்ட இளைஞர்கள் -வைரல் வீடியோ

தேவர் ஜெயந்தி Thevar Jayanthi
By Petchi Avudaiappan Oct 31, 2021 12:06 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

ராமநாதபுரத்தில் தேவர் ஜெயந்தி விழாவில் கலந்துகொள்ள சென்ற இளைஞர்கள் சிலர் காவல்துறை வாகனத்தின் மீது ஏறி நின்று குத்தாட்டம் போட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவரின் 114-வது ஜெயந்தி மற்றும் 59-வது குருபூஜை விழா ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 28 ஆம் தேதி தொடங்கி 30 ஆம் தேதி வரை நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று விமரிசையாக தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. 

இதனை  முன்னிட்டு மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள அவரது முழு வெண்கல திருவுருவ சிலைக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.தொடர்ந்து, பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் பல்வேறு கட்சித் தலைவர்களும் நேரில் சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். 

இந்நிலையில், கமுதியில் குருபூஜை விழாவில் கலந்துகொள்ள சென்ற இளைஞர்கள் சிலர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை வாகனத்தின் மீது ஏறி நின்று குத்தாட்டம் போட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ கொண்டு விழா முடிந்ததும் புகார் பெற்று அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.