அடேங்கப்பா.. ஐபிஎல் ஏலம் - சென்னை அணி எடுத்த வீரர்கள் விவரம் இதோ...

MS Dhoni Chennai Super Kings Cricket IPL 2023
By Sumathi Dec 24, 2022 09:45 AM GMT
Report

சென்னை அணியில் எடுக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை இந்த தொகுப்பில் அறியலாம்.

கொச்சியில் நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்தில் 10 அணிகள் ரூ.167 கோடி செலவு செய்து 29 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 80 வீரர்களை ஏலத்தில் எடுக்கப்பட்டது. இந்த ஏலத்தில் சென்னை அணி எடுத்த வீரர்கள் விவரம்: 

பென் ஸ்டோக்ஸ் :

இங்கிலாந்தை சேர்ந்த அதிரடி வீரரான பென் ஸ்டோக்ஸை ரூ.16.25 கோடி எனும் தொகைக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

அடேங்கப்பா.. ஐபிஎல் ஏலம் - சென்னை அணி எடுத்த வீரர்கள் விவரம் இதோ... | Details Of Players Picked By Chennai Team Ipl

 கைல் ஜேமிசன்:

நியூசிலாந்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான கைல் ஜேமிசனை, அடிப்படை தொகையான ரூ.1 கோடிக்கு சென்னை அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

நிஷாந்த் சிந்து:

ஹரியானவை சேர்ந்த நிஷாந்த் சிந்து 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரை வென்ற இந்திய அணியில் இடம்பெற்று இருந்தார். இவரை இறுதியில் ரூ. 60 லட்சத்திற்கு சென்னை அணி சென்னை அணி ஏலத்தில் எடுத்தது. 

ரகானே:

 ஏலத்தில் முதல் வீரராக, இந்திய வீரர் ரகானேவை அடிப்படை தொகையான ரூ.50 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

 ஷேக் ரஷீத்:

ஆந்திராவை சேர்ந்த 18 வயதான ஷேக் ரஷீத்தை அடிப்படை விலையான ரூ.20 லட்சத்திற்கு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

அஜய் மண்டல்:

சத்திஸ்கரை சேர்ந்த ஆல்-ரவுண்டரான அஜய் மண்டல் என்பவரும், ஐதராபாத்தை சேர்ந்த பகத் வர்மா என்பவரும் ரூ.20 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர்.

சென்னை அணி:

தோனி, டேவான் கான்வே, ருதுராஜ், ராயுடு, சேனாபதி, மொயின் அலி , ஷிவம் துபே, ஹங்கர்கேகர், பிரிட்டோரியஸ், சான்ட்னர், ஜடேஜா, துஷார், முகேஷ், பத்திரனா, சிமர்ஜீத், தீபக் சாஹர், சோலங்கி, தீக்ஷனா, ஸ்டோக்ஸ், ரஹானே, ரஷீத், நிஷாந்த் சிந்து, ஜமீசன், அஜய் மான்டால் , பகத் வர்மா