Tuesday, May 6, 2025

ஐபிஎல் ஏலம் 2023 : ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன சாம்கரன் எவ்வுளவு தெரியுமா ?

IPL 2023
By Irumporai 2 years ago
Report

ஐபிஎல் சீசன்கள் இது வரை 15 முடிந்துள்ள நிலையில் அடுத்த வருடம் 16 வது சீசன் நடைபெறவுள்ளது . கடந்த ஆண்டு மெகா ஏலம் நடைபெற்ற நிலையில் ,இந்த முறை மினி ஏலம் நடைபெறுகிறது .

இந்த ஏலம் கொச்சியில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் நடைபெற்றுவருகிறது. இந்த ஏலத்தில்273 இந்திய வீரர்களும் , 132 வெளிநாட்டு வீரர்களும் உள்ளனர் இதில் ஒட்டு மொத்தமாக 87 வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த ஏலத்தில் இங்கிலாந்து வீரர் ஹேரி புரூக்கை ரூ.13.25 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாங்கியது மயங்க் அகர்வாலை ரூ.8.25 கோடிக்கு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாங்கியது அஜிங்க்யா ரஹானேவை அடிப்படை விலையான ரூ.50 லட்சத்துக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியது

ஐ.பி.எல் மினி ஏலம் - ரஹானேவை சிஎஸ்கே அணி ரூ.50 லட்சத்துக்கு வாங்கியது ஐ.பி.எல் மினி ஏலம் - இந்தியா வீரர் மயங்க் அகர்வால் - ரூ.8.25 கோடிக்கு வாங்கியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

அணி ஐ.பி.எல் மினி ஏலம் - இங்கிலாந்து வீரர் ஹாரி பூருக்கை ரூ.13.25 கோடிக்கு வாங்கியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஐ.பி.எல் மினி ஏலம் - வில்லியம்சனை வாங்கியது குஜராத் டைட்டன்ஸ் 

டி20 உலகக்கோப்பையில் தொடர் நாயகன் விருது பெற்ற இங்கிலாந்து வீரர் சாம் கரனை, ₹18.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ்,ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன வீரரானார் சாம் கரன் என்பது குறிப்பிடதக்கது.